கம்பராமாயணம் 1734 · அயோத்தியா 4.52

Section அயோத்தியா காண்டம் / 4. நகர் நீங்கு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

“உரவோய்! - வலியவனே; தள்ளா நிலை சால் மெய்ம்மை - தவறக் கூடாத தன்மை பொருந்திய சத்தியத்தை; தழுவா - ஏற்று; வழுவாவகை நின்று - அது சிறிதும் தவறுபடாத வகையில் நிலைத்து நின்று; எள்ளா நிலைகூர் பெருமைக்கு இழிவு ஆம் என்றால் - இகழப்படாத தன்மை பொருந்திய நினது பெருந்தன்மைக்கு இழிவை உண்டாக்கும் என்றால்; விள்ளா நிலை சேர் அன்பால் - விண்டுரைக்க முடியாத தன்மை பொருந்திய காதலால்; மகன்மேல் மெலியின் - பிள்ளையைக் கருதித் தளர்ந்தால்; உலகம் கொள்ளாது அன்றோ - உலகோர் அதனை ஏற்றுக் கொள்ளார்கள் அல்லவா,' என்றாள் - என்று சொல்லி; கணவன் குறையக் குறைவாள் - கணவனாகிய தயரதன் மெலிவடையத் தானும் மெலிவடைவாளானாள்.

மகன்மேல் அன்பால் சத்தியம் தவறுதல், சத்தியம் தவறாமல் வரம் கொடுத்த பிறகு மனம் தளர்தல் என்ற இரண்டில் ஒன்றே செய்யத்தக்கது என்றாள் கோசலை. இதனுள் சத்தியம் தவறாமையே செய்யத்தக்கதாகலின், அதனைத் தளராது செய்தலால் நாயகனது இழப்பு உண்டாகுமே என்று கருதிக் கோசலை மேலும் அவன் போலவே தளர்வாளானாள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'If, embracing the truth that must not be let fall and standing firm so as not to slip,
  2. it would bring disgrace to your greatness that none can scorn, O mighty one,
  3. then if you weaken over your son through unbreakable love, the world
  4. will not accept it, will it?' she said, and as her husband sank, she sank.

What the poem says

Kōcalai reasons with Tacarataṉ. He has kept his word; now to collapse with grief over his son would itself undermine the glory of that truthfulness, and the world would not approve.

She sees that keeping the truth is the only right course. Yet keeping it without faltering will cost her husband's life, and so, as he weakens, she weakens with him.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'taḷḷā nilai cāl meymmai taḻuvā vaḻuvāvakai niṉṟu
eḷḷā nilai kūr perumaikku iḻivu ām eṉṟāl, uravōy!
viḷḷā nilai cēr aṉpāl makaṉmēl meliyiṉ, ulakam
koḷḷātu aṉṟō?' eṉṟāḷ, kaṇavaṉ kuṟaiyak kuṟaivāḷ.