கம்பராமாயணம் 1737 · அயோத்தியா 4.55
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
“மகனே! - இராமனே; கண்ணும் நீராய் - கண்கள் இரண்டும் நீராகி; உயிரும் ஒழுக - உயிரும் உடலை விட்டு வெளியில் செல்ல; கழியாநின்றேன் - இறந்துகொண்டுள்ளேன்; வினையேற்கு - இப்படித் தீவினையுடைய எனக்கு; எண்ணும் நீர் நான்மறையோர் - மதிக்கப்படும் தன்மையுடைய வேதம் வல்ல அந்தணர்; எரி முன் நின்மேல் சொரிய - முடிசூட்டு விழாவிற்கு முன்னர் உண்டாக்கப்பட்ட வேள்வித்தீயின் முன்னால் உன்மேல் அபிடேகம் செய்யவேண்டி; மண்ணும் நீராய் வந்த புனலை - அபிடேகசுத்தத நீராக வந்த தீர்த்த நீரை; (இனி அதற்குத் தேவை இன்மையால்) உண்ணும் நீராய் உதவி - நான் இறந்த பிறகு எனக்குச் செய்யப்பெறும் பிரேத தாகசாந்தி நீராகக் கொடுத்து (பிறகு); உயர்கான் அடைவாய்! - உயர்ந்த காட்டை அடைவாயாக; என்றான்-
முடிபுனைந்து நீராட்டப் புண்ணிய தீர்த்தங்கள் கொண்டுவருவர். அது மண்ணு மங்கலம்' எனப்படும். அதுவே 'மண்ணும் நீர் எனப்பட்டது. இறந்த பின் பத்து நாளும் வளர்ந்து எழுகின்ற பிரேத பூதத்துக்குத் தாகசாந்தி செய்ய நித்தியவதி என்னும் பெயரால் நீர்க்கடன் இறுத்தல் மகனது கடன்; ஆதலால் அதனைத் தயரதன் இராமனைச் செய்ய வேண்டினான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'With my eyes turned to water and my life flowing out, I am passing away;
- the water that the honoured masters of the four Vedas, before the fire, would pour on you,
- the water that came for your ritual bath, my son, to me, the doomed,
- give as water to drink, and then go to the high forest,' he said.
What the poem says
The dying king speaks to Irāmaṉ as if he were present. The holy water brought for the coronation bath, which the Vedic priests were to pour over Irāmaṉ before the sacred fire, is no longer needed.
Let him use it instead, Tacarataṉ says, to make the water-offering that a son gives to quench the thirst of his dead father's spirit in the ten days after death, and then go to the forest.