கம்பராமாயணம் 1738 · அயோத்தியா 4.56
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
படைமாண் அரசை - சேனைகளினது மாட்சிமையுடைய அரசர்களை; பல கால் - இருபத்தொரு தலைமுறை; பழுவாய் மழுவால் - பழுக்கக் காய்ச்சிக் கூர்மையாக்கப்பட்ட மழுப் படையால்; எறிவான் - வெட்டி அழித்தவனும்; மிடை மா வலி தான் அனையான் - செருக்கிய மிக்க பலத்தில் தன்னைத் தானே ஒத்தவனும் ஆகிய பரசுராமனை; வில்லால் அடுமாவல்லாய்! - வில்லாலே வெல்லும் ஆற்றல் வல்லவனே; (உன்னை) “உடைமா மகுடம் புனை' என்று உரையா - உன்னுடைய பெரிய முடியைச் சூடிக்கொள் என்று சொல்லி; உடனே - அப்பொழுதே; சடை மா மகுடம் புனையத் தந்தேன் அந்தோ'- சடையாகிய பெரிய மகுடத்தை அணிந்துகொள்ளும்படி தந்துவிட்டேனே ஐயகோ; என்றான்.
நிருபர்க்ககு ஒரு பழிபற்றிட (1275) என்ற பரசுராமப் படலப்பாடலில், “இருபத்தொரு படிகால்' என்று இந்நிகழ்ச்சி கூறப்பெறுதல் அறிக. 'இருபத்தொருகால் அரசு களைகட்ட பரசுராமன், மேவரும் சாந்திமத்த வரண் கருதி இருத்திய செம்பொன் திருத்தகுமுடியும்' என்னும் முதலாம் இராசேந்திரன் மெய்க்கீர்த்தியும் இதனைக் கூறும். அடுமா - அடுமாறு.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'You who were able, with your bow, to overcome him who many times struck down the kings of great armies
- with his red-hot axe, him whose crowding might matched only his own!
- Telling you, "Put on your own great crown," at once I, cruel one,
- gave you instead the great crown of matted hair to wear, alas!' he said.
What the poem says
Tacarataṉ recalls Irāmaṉ's victory over Paracurāmaṉ, who with his axe destroyed the warrior kings twenty-one times over and whose strength had no equal but himself; Irāmaṉ overcame him with the bow.
To such a son the king offered the royal crown, and in the same breath, he laments, gave him instead the 'crown' of an ascetic's matted hair. The commentary cites the Paracurāmaṉ episode and a Chola inscription that also mentions the twenty-one destructions.