கம்பராமாயணம் 1739 · அயோத்தியா 4.57

Section அயோத்தியா காண்டம் / 4. நகர் நீங்கு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

“உருவம் கறுத்தாய்! - திருமேனி கறுத்திருப்பவனே; மனமும் கண்ணும் கையும் செய்யாய்! - உள்ளமும் கண்ணும் கையும் செம்மையாக இருப்பவனே; பொறையே பொறுத்தாய்! - பொறுமையையே தரித்திருப்பவனே; இறைவன் - சிவபிரான்; மூன்று புரம் எரித்த போர்வில் இறுத்தாய்! - முப்புரங்களை எரித்த காலத்துப் பிடித்த போர்க்குரிய வில்லை (சீதா கல்யாணத்துக்கு முன்) ஒடித்தவனே; “தமியேன் என்னாது - தனித்துத் துணையின்றி உள்ளேன் என்று கருதாது; என்னை இம் மூப்பிடையே வெறுத்தாய் - என்னை இம்முதுமைக் காலத்தில் வெறுத்திட்டாய்; இனி நான் வாழ்நாள் வேண்டேன் வேண்டேன்' - இனிமேல் நான் வாழும் நாளை விரும்பமாட்டேன்; என்றான் -.

இராமன் சிறப்புகளை எல்லாம் நினைந்து நைந்துருகுகிறான் தயரதன். “வேண்டேன், வேண்டேன் புலம்பலில் வந்த அடுக்கு. உள்ளத்துக்குச் செம்மை கோட்டமின்மையாம். மற்றவை நிறம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'You of the dark form! You whose mind and eyes and hands are red and true!
  2. You who bore patience itself! You who broke the war-bow with which the Lord
  3. burned the three cities! Not thinking that I am alone, me in this old age
  4. you have cast away; now I want no more days of life, I want none,' he said.

What the poem says

Tacarataṉ lists his son's glories: his dark body, a mind that is upright and eyes and hands that are red (the commentary explains that for the mind 'red' means free of crookedness, for eyes and hands it is their colour), his boundless patience, and his breaking of the bow Civaṉ used to burn the three cities, before his marriage to Cītai.

Yet this son has left his old father alone, and the king wants no more of life. The doubled 'I want none' is the repetition of lament.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'kaṟuttāy uruvam! maṉamum kaṇṇum kaiyum ceyyāy
poṟuttāy! poṟaiyē! iṟaivaṉ puram mūṉṟu eritta pōr vil
iṟuttāy! tamiyēṉ eṉṉātu eṉṉai im mūppiṭaiyē
veṟuttāy; iṉi nāṉ, vāḻnāḷ vēṇṭēṉ, vēṇṭēṉ' eṉṟāṉ.