கம்பராமாயணம் 1740 · அயோத்தியா 4.58
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
“பொன்னின் முன்னம் ஒளிரும் பொன்னே! - பொன்னுக்கு மேற்பட்டுப் பிரகாசிக்கின்ற பொன் போன்றவனே; புகழின் புகழே! - புகழுக்குப் புகழானவனே!; மின்னில் மின்னும் வரிவில் குமரா! - மின்னலைப் போல் விட்டு விளங்கும் கட்டமைந்த வில்லை உடைய குமரனே; மெய்யின் மெய்யே! - உண்மையின் நிலைபேறே; என்னின் முன்னம் - எனக்கு முற்பட்டு; நீ வனம் அடைதற்கு- நீ காடு புகுவதற்கு; யான் எளியேன் அல்லேன் - நான் எளிமை உடையவன் அல்லன்; உன்னின் முன்னம் - உனக்கு முன்னால்; உயர் வானகம் புகுவேன்!- உயர்ந்த விண்ணை அடைவேன்;' என்றான்.
'கானகமே மிக விரும்பி நீ துறந்த வள நகரைத் துறந்து நானும், வானகமே மிக விரும்பிப் போகின்றேன். மனுகுலத்தார் தங்கள் கோவே' என்ற (திவ்ய. 738) குலசேகராழ்வார் பாசுரமும் காண்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Gold that shines beyond gold! Fame of fame!
- Prince with the banded bow that flashes beyond lightning! Truth of truth!
- Before me, for you to reach the forest, I am not so weak as to allow;
- before you, I shall enter the high heaven,' he said.
What the poem says
Tacarataṉ praises his son in a string of superlatives: gold brighter than gold, the glory of glory, the truth of truth.
He declares that he will not be so feeble as to watch Irāmaṉ enter the forest first; before his son leaves, he will himself have gone to heaven. The commentary compares a hymn of Kulacēkara Āḻvār in which Tacarataṉ, abandoned city and all, sets out for heaven as Irāmaṉ sets out for the forest.