கம்பராமாயணம் 1744 · அயோத்தியா 4.62
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
“பொன்னே! - பொன் போலச் சிறந்தவனே; ஒலி ஆர் கடல்சூழ் உலகத்து - ஒலிக்கின்ற கடலாற் சூழப்பெற்ற இப்பூமியில்; உயர் வானிடை - உயர்ந்த விண்ணுலகத்தில்; நாகரினும் - நாகலோகமாகிய பாதலத்திடத்தும்; பொலியாநின்றார் - சிறந்து நின்றவர்கள்; உன்னைப் போல்வார் உளரோ? - உன்னை ஒத்தவர்கள் வேறு இருக்கின்றார்களோ? “வலி உடையார் யார்' என்றான் - வலிமை உடையவர்கள் யார் உளர் என்று சொல்லி; மழுவாள் உடையான் வரவும் - மழுப்படை உடைய பரசுராமன் வரவும்; (அது கண்டு) சலியா நிலையாய் - (சிறிதும்) தளராத நிலை உடையவனாய் இருந்தாய்; என்றால்; தவிர்வார் உளரோ? - (நீ ஒன்று செய்தால்) உன்னைச் செய்யாதே என்று தடுப்பார் இருக்கின்றார்களா; ' என்றான்.
மிக்க வலியுடையவர்கள் தம் விருப்பம்போலச் செய்ய இயலும். அவர்களைத் தடுக்க வல்லவர் யாரும் இலர் ஆதலின், என் நிலை கருதி “இராமா! நீ வனம் போகாதிருப்பின் உன்னை யாரால் தடுக்க முடியும்' என்று குறிப்பால் வினாவிப் புலம்பினன் தயரதன்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'In the world girdled by the roaring sea, in high heaven, and among the Nāgas,
- of those who shine in glory, is there any like you? My golden one!
- Who has such strength?' he said; 'when he of the axe-blade came,
- you stood unshaken; then is there anyone who could hold you back?' he said.
What the poem says
No one on earth, in heaven or in the serpent world below is Irāmaṉ's equal in strength. When Paracurāmaṉ came with his axe, Irāmaṉ did not waver.
The mighty do as they will and none can stop them. By this the king hints at his real meaning: if Irāmaṉ chose to stay, who could force him to go?