கம்பராமாயணம் 1751 · அயோத்தியா 4.69

Section அயோத்தியா காண்டம் / 4. நகர் நீங்கு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

“மெய்யின் மெய்யே! - சத்தியத்தின் சத்தியமே; உலகின் வேந்தர்க் கெல்லாம் வேந்தே! - உலகில் உள்ள அரசர்க்கெல்லாம் அரசனே; நின் உயிரை உய்யும் வகை ஓம்பாது - உன்னுடைய உயிரைப் பிழைக்கும் வகையில் பாதுகாக்காமல்; இங்ஙன் தேம்பில் - இவ்வாறு வாடினால்; வையம் முழுதும் துயரால் மறுகும் - இவ்வுலகம் முழுதும் துன்பத்தால் கலங்கிச் சுழலும்; அரசே! - ; நம் ஐயன் - நம் மகன்; முனிவனுடன் வரினும் வரும் - வசிட்டனுடன் (கான் ஏகாது) திரும்பி வந்தாலும் வருவான்; அயரேல் - சோர்வடையாதே, ' என்றாள் -

உலகத்துக்காக வாழ்ந்த நீ துன்புற்றால் இப்பொழுது உலகமும் துன்புறும். உனக்காக இல்லாவிடினும் உலக மக்களுக்காகத் துன்பத்தில் துவளாமல் இருக்க என வேண்டினாள். 'வரினும் வரும்' என்பது ஐயம். வருவது உறுதியில்லை என்பது அவள் அறிந்தபடியைப் புலப்படுத்தி நின்றது. 'ஆல்' அசை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Truth of truth! King of all the kings of the world!
  2. If, not guarding your life so that it may survive, you languish like this,
  3. the whole earth will reel in sorrow; with the sage our
  4. lord may yet come back; do not despair, my king!' she said.

What the poem says

Recovering herself, Kōcalai begs the king to guard his life. He has lived for the world, and if he suffers the whole world will suffer; if not for his own sake, he must hold on for his people.

She adds that their son may perhaps return with the sage. The commentary notes that her phrasing, 'may yet come', shows she herself doubts it.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'meyyiṉ meyyē! ulakiṉ vēntarkku ellām vēntē!
uyyumvakai niṉ uyirai ōmpātu iṅṅaṉ tēmpil,
vaiyam muḻutum tuyarāl maṟukum; muṉivaṉuṭaṉ nam
aiyaṉ variṉum varumāl; ayarēl, aracē!' eṉṟāḷ.