கம்பராமாயணம் 1754 · அயோத்தியா 4.72
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
“கோசலை! - கோசலையே; பொன் ஆர் வலயத் தோளான் - பொன்னாற்செய்யப் பெற்ற வாகுவலயம் அணிந்த தோளை உடைய இராமன்; கான் புகுதல் தவிரான் - காட்டிற் செல்லுதலைக் கை விடான்; என் ஆர் உயிரோ அகலாது ஒழியாது - என்னுடைய அரிய உயிரோ போகாமல் நிற்காது; இது கேள் - இதனைக் கேட்பாயாக; “ஒருமா முனிவன் முன்நாள் மொழியும் சாபம் உளது” என்று - ஒரு சிறந்த தவசி முன்னொரு காலத்து (என்னை நோக்கிக்) கூறிய சாபம் உண்டு' என்று; அந்நாள் உற்றது எல்லாம் - அந்தநாளில் நடந்த நிகழ்ச்சிகள் எல்லாவற்றையும்; அவளுக்கு - அந்தக் கோசலையிடம்; அரசன் - தயரதன்; அறைவான் - கூறுவான் ஆனான்.
இராமன் காடு செல்வதும் தயரதன் உயிர் போவதும் நிச்சயம் நிகழ்ந்தே தீரும் முன்னாளைய சாப வரலாறு உறுதிப்படுத்துவது ஆதலின் அதனைக் கோசலைக்குக் கூறலாயினன். 'கானோ' “ஓ” காரம் தெரிநிலை. அகலாது ஒழியாது இரண்டு எதிர்மறைகள் கூடி “அகலும்” என்ற உடன்பாட்டுப் பொருள் தந்தன. “உற்றது எல்லாம்” ஒருமை பன்மை மயக்கம். 'உற்றவை' என வரல் வேண்டும். “எல்லாம் என்னும் பெயர் நிலைக் கிளவி, பல்வழி நுதலிய நிலைத் தாகும்மே” என்பது தொல்காப்பியம். (தொல். சொல். 188) அவளுக்கு' அவளிடம்” என்று ஏழாவதன்கண் நான்காவது வந்த உருபு மயக்கம். முனிவன் - சல போசனன் (நீரையே ஆகாரமாக உடையவன்).
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'He whose shoulders wear golden armlets will not hold back from entering the forest;
- and my dear life will not fail to depart; hear this, Kōcalai:
- there is a curse spoken long ago by a great sage,' and
- all that happened on that day the king told her.
What the poem says
Tacarataṉ tells Kōcalai that Irāmaṉ will surely go and that he himself will surely die, because both were fixed long ago by a sage's curse. He begins to tell her the story.
The commentary adds grammatical notes, citing the Tolkāppiyam on the use of 'all', and identifies the sage as one who lived on water alone.