கம்பராமாயணம் 1755 · அயோத்தியா 4.73

Section அயோத்தியா காண்டம் / 4. நகர் நீங்கு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'வெய்ய கானம் அத்து இடை ஏ , வேட்டை வேட்கை மிகவே
ஐய , சென்று , கரியோடு அரிகள் துருவித் திரிவேன் ;
கையிற் சிலையும் கணையும் கொடு கார் மிருகம் வரும் ஓர்
செய்ய நதியின் கரைவாய்ச் சென்றே மறைய நின்றேன் .

பொருள் · Meaning in Tamil

“வேட்டை வேட்கை மிக - வேட்டையாடுதலில் விருப்பம் மேற்செல்ல; வெய்ய கானத்திடையே சென்று - கொடிய காட்டின்கண் போய்; ஐய கரியோடு அரிகள் துருவித் திரிவேன் - அழகிய யானையோடு சிங்கங்களைத் தேடிச் சுற்றுகின்ற யான்; கார் மிருகம் வரும் - கரிதான விலங்காகிய யானை முதலிய வருகின்ற; ஓர் செய்ய நதியின் கரைவாய் - ஒரு துறையொழுங்கு உடைய ஆற்றின் கரைக்கண்; கையும் சிலையும் கணையும் கொடு - கையில் வில்லும் அம்பும் கொண்டு; சென்று மறைய நின்றேன் - சென்று மறைவாக நின்றேன்.

ஐய - அழகாக எனப் பொருள்படும், வளர்ச்சியாலும் வனப்பாலும் வியப்புத்தரும் எனலுமாம். கார் மிருகம் - யானை, செய்ய நதி - துறை ஒழுங்கு இங்கே ஆற்றுக்குச் செம்மை. அதனால் மனிதரும் தண்ணீர் எடுக்க வசதியான ஆறு எனல் ஆகும். 'ஏ' இரண்டும் அசை

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'In the fierce forest, my lust for the hunt running high,
  2. I went, my lord, and roamed, tracking great elephants and lions;
  3. with bow and arrow in hand, by a river with good bathing steps where dark beasts come,
  4. I went and stood in hiding.

What the poem says

Tacarataṉ begins the tale of his youthful hunting expedition. Eager for the chase, he roamed the wild forest hunting elephants and lions.

One day he hid, bow and arrows ready, beside a river with well-made steps down to the water, a place where elephants, the 'dark beasts', came to drink and where people too could easily fetch water.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'veyya kāṉattiṭaiyē, vēṭṭai vēṭkai mikavē
aiya, ceṉṟu, kariyōṭu arikaḷ turuvit tirivēṉ;
kaiyum cilaiyum kaṇaiyum koṭu kār mirukam varum ōr
ceyya natiyiṉ karaivāyc ceṉṟē maṟaiya niṉṟēṉ.