கம்பராமாயணம் 1756 · அயோத்தியா 4.74

Section அயோத்தியா காண்டம் / 4. நகர் நீங்கு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'ஒரு மா முனிவன் மனையோடு ஒளி ஒன்று இலவாய் நயனம்
தரு மா மகவே துணையாய்த் தவமே புரி போழ்தினின் வாய்
அரு மா மகனே புனல் கொண்டு அகல்வான் வருமாறு அறியேன்
பொரு மா கணை விட்டிடலும் புவிமீது அலறிப் புரள . '

பொருள் · Meaning in Tamil

“ஒரு மா முனிவன் - ஒப்பற்ற சிறந்த முனிவன்; மனையோடு - தன் மனைவியோடு; நயனம் ஒளி ஒன்றிலவாம் - கண்கள் பார்வை ஒளி இழந்தனவாகி; திருமா மகனே - அழகிய சிறந்த மகனே; துணையாய் - தனக்கு உதவியாகக் கொண்டு; தவமே புரி போழ்தினின்வாய் - தவம் செய்துகொண்டிருக்கின்ற காலத்தின்கண்; அரு மாமகனே - அரிய சிறந்த அம்மகனே; புனல் கொண்டு அகல்வான் - நீர் எடுத்துக்கொண்டு செல்வதற்காக; வருமாறு அறியேன் - வரும் தன்மையை அறியாதவனாய்; பொரு மா கணை விட்டிடலும் - அழிக்கின்ற சிறந்த அம்பை விட்ட அளவில்; புவிமீது அலறிப் புரள - (அம்பு பட்டு அம்மகன்) மண்ணின் மீது புரண்டு அலற.

மகன் - புரோசனன், மகனே துணையாய்த் தவம் செய்தனர் என்பதால் முனிவனும் அவன் மனைவியும் இருவரும் பார்வை இழந்தவர்கள் என்பதாம். நீர் முகக்கும் ஓசை கேட்டு ஓசையின்மூலம் அம்பை விடும் “சப்த வேதி என்னும் முறையில், யானை நீர்குடிப்பதாகக் கருதி அம்பை எய்தான் ஆதலின் “அறியேன்” என்றான். இருமுதுகுரவர்க்கும் கடமை ஆற்றும் சிறப்பு நோக்கி, “திரு மா', “அரு மா' என்று அம்மகனைச் சிறப்பித்தார். மகனே 'ஏ' காரம் பிரிநிலை. வேறு துணையில்லை

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'A great sage with his wife, their eyes having lost all light,
  2. with only their fine noble son as their help, while they were doing penance,
  3. that rare noble son came to take water and go back; not knowing he was coming,
  4. I loosed a great deadly arrow, and he cried out and rolled on the ground.'

What the poem says

A sage and his wife, both blind, lived in penance with their devoted son as their only support. The son came to the river to fetch water.

Hearing the sound of water being drawn, Tacarataṉ took it for an elephant drinking and shot by sound alone, the skill called 'shooting at sound'. The boy fell screaming to the ground. The poet's epithets 'fine' and 'rare' honour the son's devotion to his aged parents.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'oru mā muṉivaṉ maṉaiyōṭu oḷi oṉṟilavāy nayaṉam
tiru mā makaṉē tuṇaiyāy tavamē puri pōḻtiṉiṉvāy
aru mā makaṉē puṉal koṇṭu akalvāṉ varumāṟu aṟiyēṉ
poru mā kaṇai viṭṭiṭalum puvimītu alaṟip puraḷa.'