கம்பராமாயணம் 1774 · அயோத்தியா 4.92

Section அயோத்தியா காண்டம் / 4. நகர் நீங்கு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

“கேகயர் கோன் கொம்பு - கேகய நாட்டு அரசன் மகளாகிய கைகேயி; இரண்டு வரம் கொண்டாள் - இரண்டு வரங்களைப் (தசரதன்பால்) பெற்றுக் கொண்டாள்; தண்டாத செங்கோல் - தடைபடாத செங்கோலாட்சியிற் சிறந்த; தயரதனும்தான் - தயரதமன்னனும்; அவட்கு - கைகேயிக்கு; அளித்தான் - (அவ்வரங்களைக்) கொடுத்தான் (அவ்வரங்களில் ஒன்றால்); “ஒண்தார் முகிலை வனம் போகு” என்று ஒருப்படுத்தாள் - ஒள்ளிய மாலை அணிந்த மேகம் போன்ற இராமனைக் காட்டிற்குச் செல்' என்று சொல்ல (அரசனை) உடன்பட வைத்தாள்; எண் தானும் வேறு இல்லை - எண்ண வேண்டிய வேறு துன்பம் ஏதும் இல்லை; அடுத்த ஆறு ஈது” - நடந்த நிகழ்ச்சி இதுவே; என்றான் -

“கொம்பு' உவமையால் கைகேயியை உணர்த்திற்று. இராமன் வனம் போகின்ற வரத்தை முதலில் கொண்டதாக முனிவன் அரசவைக்குக் குறிப்பிட்டதில் ஒரு நயம் உண்டு. இராமன் காடு சென்று விடின் மிகுந்து நிற்போருள் மூத்தவன் பரதனே ஆதலின், இயல்பாகவே அவனுக்கு நாடாளும் உரிமையை உண்டாக்கிவிடுதலின். இதனையே கைகேயி மனம் தரிக்க வந்த மந்தரையும் முன்னர் 'மூத்ததவற்கு உரித்து அரசு எனும் முறைமையின் உலகம், காத்தத மன்னனின் இளையன் அன்றோ கடல் வண்ணன், ஏத்தும் நீள்முடி புனைவதற்கு இசைந்தனன் என்றால், மீத்தரும் செல்வம் பரதனை விலக்குமாறு எவனோ' (1475) என்று கேட்டாள். தயரதன் முதியவன், மூத்தவன், அவன் தவம் செய்ய வனம் சென்றால், அவனிலும் இளையனாகிய இராமன் ஆட்சி உரிமை அடைவான் எனில், இராமன் வனம் புகுமாறு செய்யப்பெற்றால் பரதன் ஆட்சியுரிமை எய்துவதில் தடை என்ன என்பது மந்தரையின் வாதம். அதை ஒட்டியே இங்கே வசிட்டனும் மன்னர் பேரவைக்கு இராமன் வனம் புகு ப எல் முன்னர் அறிவித்ததாக அமைந்திருப்பது அறிந்து இன்புறத்தக்கது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'The Kēkaya king's slender branch obtained two boons; and to her
  2. Tacarataṉ himself, of the unfailing sceptre, granted them;
  3. the raincloud with the bright garland she has bound, saying "Go to the forest";
  4. there is nothing else to think of; this is how it came about,' he said.

What the poem says

Vacittaṉ explains how it happened. Kaikēyi, slender as a branch, obtained two boons from Tacarataṉ, and by one of them made him agree that Irāmaṉ, dark and generous as a raincloud, should go to the forest.

The commentary notes that the sage mentions the exile first: once Irāmaṉ is gone, Paratan as the next eldest naturally inherits. It recalls that Mantharai used exactly this argument when she worked on Kaikēyi's mind.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1`'koṇṭāḷ varam iraṇṭu kēkayarkōṉ kompu; avaṭkut
taṇṭāta ceṅkōl tayarataṉumtāṉ aḷittāṉ;
oṇ tār mukilai 'vaṉam pōku' eṉṟu oruppaṭuttāḷ;
eṇtāṉum vēṟu illai; ītu aṭuttavāṟu'' eṉṟāṉ.