கம்பராமாயணம் 1775 · அயோத்தியா 4.93
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
பேராத வாய்மைப் பெரியோன் உரை - பிறழ்ந்து போகாத உண்மைக்கு உறைவிடமான வசிட்ட முனிவனது வார்த்தை; செவியில் சாராத முன்னம் - (தங்கள்) காதுகளில் சேர்வதற்கு முன்னமே; ஆராத காதல் அரசர்களும் - (இராமனது முடிசூட்டு விழாவில்) அடங்காத அன்பை உடைய அரசர்களும்; அந்தணரும் - வேதியரும்; மற்று உள்ள மாந்தர்களும் - வேறு உள்ள மனிதர்களும்; வார் ஆர் முலையாரும் - கச்சணிந்த தனத்தையுடைய மகளிரும்; தயரதனைப் போல் வீழ்ந்தார் -
மற்றுள்ள மாந்தர்கள் - அமைச்சர் சேனைத் தலைவர் தூதுவர் முதலியவர். பெண்டிர் துன்பம் பெரிதாய்த் தோன்றுமாதலின் செய்யுளில் முதற்கண் உரைக்கப்பட்டது. தயரதன் தன் மகன் காரணமாகத் துன்பத்தில் ஆழ்ந்தது போலவே அத்தகைய அன்புடையவர்கள் இவர்களும் ஆதலின் 'தயரதனைப் போல்' துன்புற்றார் என்றார். அதனையே “ஆராத காதல்' எனவும் கூறினார்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The women with bodices on their breasts, and all the other people,
- the kings of insatiable love, and the Brahmins,
- before the words of the great one of unswerving truth had even reached their ears,
- fell down, just like Tacarataṉ.
What the poem says
The news devastates everyone in the hall: the women, the ministers, generals and envoys, the kings who loved Irāmaṉ beyond measure, and the priests. Before the sage's words had fully reached their ears, they collapsed just as Tacarataṉ had.
The commentary notes that the women are named first because their grief shows most, and that the comparison with the king means their love for Irāmaṉ equals his.