கம்பராமாயணம் 1776 · அயோத்தியா 4.94
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
உடம்பு எல்லாம் - மக்கள் உடல்கள் எல்லாம்; புண் உற்ற தீயின் - புண்ணில் பட்ட நெருப்புப் போல; புகை உற்று - அனல் மூச்சு விட்டு; உயிர் பதைப்ப - உயிர் துடிதுடிக்க; மண் உற்று - நிலத்தில் பொருந்தி; அயர்ந்து - சோர்ந்து; மறுகிற்று - சுழன்று புரண்டது; கண் உற்ற வாரி - கண்ணிலிருந்து வந்த நீர்ப்பெருக்கு; கடல் உற்றது - கடலாகப் பெருகியது; எம் மருங்கும் - எப்பக்கத்திருந்தும்; விட்டு அழுத பேரோசை - (எல்லோரும்) வாய்விட்டு அழுத குரல் ஒலி; விண் உற்றது - வானத்தை அடைந்தது.
உடம்பு எல்லாம் மறுகிற்று ' ஒருமை பன்மை மயக்கம். தொகுதி ஒருமை எனக் கூறி வழாநிலை எனலும் ஆம். கண்ணீர்ப் பெருக்கு கடலைச் சென்று அடைந்தது எனலும் ஆம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Like fire in a wound, breathing out hot smoke, their lives writhing,
- all their bodies fell to the earth, fainted and rolled;
- the flood from their eyes became a sea; and in that moment
- the great sound of weeping, let loose on every side, reached the sky.
What the poem says
The people's grief is described physically: like a burning wound, they gasp hot breath, fall to the ground and writhe.
Their tears swell into a sea (or flow down to the sea), and the sound of open weeping from every side rises to the heavens. The commentary adds a grammatical note on 'all the bodies' taking a singular verb.