கம்பராமாயணம் 1778 · அயோத்தியா 4.96

Section அயோத்தியா காண்டம் / 4. நகர் நீங்கு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

தாவாத மன்னர் - (வலி) அழியாத அரசர்; ஆ! ஆ! - அந்தோ! அந்தோ; அரசன் - தசரதன்; அருள் இலன்ஆம்'- இரக்கம் இல்லாதவன்; என்பார்; யாம் இனி அறத்தைக் காவா கைவிடுவேம்” - நாங்கள் இனிமேல் தருமத்தைப் பாதுகாக்காமல் கைவிட்டு விடுவோம்; என்பார்; மா வாதம் சாய்த்த மராமரமே போல்கின்றார் - பெருங் காற்றால் வீழ்த்தப்பட்ட ஆச்சா மரத்தைப் போன்றவராய்; தலைத் தலை - மண்மேல்; வீழ்ந்து ஏங்கினார் - விழுந்து அழுதார்.

தயரதன் தருமம் காத்து அவலத்திற் பட்டதால், இனி இத்தருமத்தை யாமும் கைவிடுவோம் என்றார். 'இலனே' 'ஏ' காரம் தேற்றம். தலைத் தலை- முதல்தலை இடப்பெயர் இரண்டாவது தலை ஏழன் உருபு - தாமிருந்த இடத்தின்கண் விழுந்து அழுதார் என்பது பொருள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Alas, alas! The king has no mercy at all,' some said;
  2. 'We will no longer guard dharma; we will abandon it,' some said;
  3. the undaunted kings fell where they stood and wailed,
  4. like great marāmaram trees felled by a mighty wind.

What the poem says

The kings cry out that Tacarataṉ has shown no mercy. Since the king fell into such misery by keeping dharma, they say, they too will give up guarding it.

They fall where they are standing, like great sal trees toppled by a storm. The commentary explains the doubled 'talaittalai' as 'in the place where they were'.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'ā ā! aracaṉ aruḷ ilaṉē ām' eṉpār;
'kāvā aṟattai iṉik kaiviṭuvēm yām' eṉpār;
tāvāta maṉṉar talaittalai vīḻntu ēṅkiṉār.
mā vātam cāytta marāmaramē pōlkiṉṟār.