கம்பராமாயணம் 1780 · அயோத்தியா 4.98
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
நா தாம் பற்றா மழலை நங்கைமார் - நாவின் கண் பிடிப்புப் பொருந்தாத மழலைச்சொற்களைப் பேசுகின்ற இனிய இளமகளிர்; சேதாம்பல் போது அனைய செங்கனிவாய் - செவ்வல்லிப் பூவை ஒத்த சிவந்த பழம் போன்ற வாயிலிருந்து; வெண் தளவம் போது ஆம்பல் தோன்ற - வெண்மையான முல்லையின் மலர் அரும்பு ஆகிய பல் வெளித் தெரிய; புணர்முலைமேல் - இரண்டாகச் சேர்ந்த மார்பகங்களின் மேல்; மழைக் கண்ணீர் ஆலி - மழை போன்ற கண்ணீர்த் துளி; பூந்தரளம் - அழகிய முத்து; மா தாம்பு அற்று என்ன - சிறந்த கயிறு அறுந்து ஒவ்வொன்றாக விழுவது போல; உக - சிந்த; ஏங்கினார் - அழுதார்கள்.
எழுத்து விளங்காத மழலைப் பேச்சு என்பார் 'நாதாம் பற்றா மழலை” என்றார். வாயில் பல் வெளித் தோன்ற அழுதார்' என்பது அவலத்தின் உச்சம். இளமகளிர் நாணத்தாற் சிறந்தவர் ஆதலின் பல் வெளித் தோன்ற நகுதலும் செய்யார் இன்று பல் வெளித் தோன்ற அழுகின்றனர் என்பதாம். இதனை இவள் மன்னும் ஒள்நுதல் ஆயத்தார் ஓராங்குத் திளைப்பினும்; முன்நுனைதோன்றாமை முறுவல் கொண்டு அடக்கித் தன், கண்ணினும் முகத்தினும் நகுபவள்; பெண் இன்றி, யாவரும் தண் குரல் கேட்ப நிரை வெண்பல் மீயுயர் தோன்ற நகா ௮ நக்ககாங்கே, ..... உண்கண் ஆயிதழ் மல்க அழும ::3 என்னும் (கலித். /42. 6-12) பாடற் பகுதி கொண்டு விளங்க அறிக. கழுத்தில் அணிந்த முத்துவடக் கயிறு அறுந்து ஒவ்வொரு முத்தாக மார்பில் விழுவது போலக் கண்ணீர்த் துளி முலைத்தலை வீழ்கிறது என்றார்
ஆங்கிலம் · English translationAI
Translation
- From red-fruit mouths like red water-lily buds, their teeth, buds of white jasmine,
- showing, upon their paired breasts, like lovely pearls
- falling when a fine cord snaps, the hail of rain-like tears spilling,
- the young women whose lisping words the tongue cannot hold wailed.
What the poem says
Young girls, still lisping in their speech, weep openly. Their red lips part to show teeth like white jasmine buds, and their tears fall on their breasts one by one like pearls dropping from a broken necklace string.
The commentary stresses the point: modest young women never laugh so openly that their teeth show, yet now they weep with their mouths wide open. It cites a passage of the Kalittokai describing a girl who hides her smile.