கம்பராமாயணம் 1785 · அயோத்தியா 4.103

Section அயோத்தியா காண்டம் / 4. நகர் நீங்கு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

“பரதன் அரசு ஆளான் - பரதன் அரசாட்சியை ஏற்கமாட்டான்; ' என்பார் - ; “ஐயன் இனி மீளான் - இராமன் இனிமேல் நாடு திரும்ப மாட்டான்; நமக்கு விதி கொடிதே காண் - நமக்கு ஊழ் வினை மிகவும் கொடுமையானது; ' என்பார் - ; “கொற்ற முடிதான் - வெற்றியுடைய மகுடம்; கோள் ஆகி வந்தவா - தீய இடையூறாகி வந்து சேர்ந்தபடி என்னே; ' என்பார்- ; மாளாத நம்மின் மனம் வலியார் ஆர்?” - (இத்தனையும் கேட்டு வைத்தும் கண்டு வைத்தும்) இறந்துபடாத நம்மைக் காட்டிலும் உலகில் கொடுமனம் உடையவர்கள் யார் உளர்; ' என்பார் -.

முடிசூடுதல் என்ற பேச்சு வரவில்லையானால் வனம் செல்லும் துயர்நிலை இராமனுக்கு வந்திராதே என்னும் ஆதங்கத்தால் முடியே இடையூறாகத் தீங்கு செய்தது என்பாராயினர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Paratan will not rule the kingdom,' some said; 'our lord now
  2. will not return; fate is cruel to us, see!' some said;
  3. 'How the victorious crown has come as a calamity!' some said;
  4. 'Who is harder of heart than we, who do not die?' some said.

What the poem says

The people's laments continue. Some say Paratan will never accept the throne; others that Irāmaṉ will never come back, and fate is cruel.

Some say the crown itself became the misfortune: had there been no talk of a coronation, Irāmaṉ would never have been sent away. And some ask who could be harder-hearted than themselves, who hear and see all this and still do not die.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'āḷāṉ parataṉ aracu' eṉpār; 'aiyaṉ iṉi
mīḷāṉ namakku viti koṭitēkāṇ!' eṉpār;
'kōḷ āki vantavā koṟṟa muṭitāṉ,' eṉpār;
'māḷāta nammiṉ maṉam valiyār ār?' eṉpār.