கம்பராமாயணம் 1786 · அயோத்தியா 4.104
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
“ஆதி அரசன் - மூல முதல் வேந்தனான தயரதன்; அருங்கேகயன் மகள்மேல் - அரிய கைகேயிமாட்டு; காதல் முதிர - அன்பு முற்றுதலால்; கருத்து அழிந்தான் ஆம் - மனம் மயங்கி அறிவு தடுமாறிவிட்டான்போலும், ' என்பார்; “சீதை மணவாளன் தன்னோடும் தீக்கானம் போதும் - (நாம்) சீதைக்கு நாயகனான இராமனோடு கொடிய காட்டிற்குப் போவோம்; அது அன்றேல் - அது முடியாமற் போகுமானால், எரி புகுதும் - நெருப்பில் வீழ்ந்து உயிர் விடுவோம்; ' என்பார்- .
ஆதி அரசன் - தசரதன், பிரதான மன்னன் என்பதாம். “ஆதி மன்னனை ஆற்றுமின் நீர்” என்று (1837.) வருதல் காண்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'The first of kings, his love for the rare Kēkaya king's daughter
- grown too ripe, must have lost his reason,' some said;
- 'With Cītai's bridegroom we will go to the cruel forest;
- if not that, we will enter the fire,' some said.
What the poem says
Some citizens conclude that Tacarataṉ, the foremost of kings, has lost his judgement through doting on Kaikēyi.
Others resolve to follow Irāmaṉ, Cītai's husband, into the wild forest, or, if they cannot, to throw themselves into fire. The commentary explains 'first of kings' as the chief king, Tacarataṉ.