கம்பராமாயணம் 1795 · அயோத்தியா 4.113

Section அயோத்தியா காண்டம் / 4. நகர் நீங்கு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1கண்ணில் கடைத் தீ உக , நெற்றியில் கற்றை நாற ,
விண்ணில் சுடரும் சுடர் வீய , மெய் நீர் விரிப்ப ,
உள் நிற்கும் உயிர்ப்பு எனும் ஊதை பிறக்க , நின்ற
அண்ணல் பெரியோன் தனது ஆதியின் மூர்த்தி ஒத்தான் .

பொருள் · Meaning in Tamil

கண்ணின் கடைத் தீ உக - கண் முனையிலிருந்து நெருப்புப் பொறி சிந்த; நெற்றியில் கற்றை நாற - அந்நெருப்புப் பட்டு நெற்றி மயிர் சுருஏறி நாற; விண்ணில் சுடரும் சுடர் தோன்ற - வானத்தில் ஒளிவீசும் சூரியன் இலக்குமணனிடமாகித் தோன்ற; மெய்ந்நீர் விரிப்ப - உடம்பு வியர்வைத் துளிகளை எங்கும் பரவச் செய்ய; உள் நிற்கும் உயிர்ப்பு எனும் ஊதை பிறக்க - உடம்பின் உள்ளே உள்ள நெடு மூச்சு என்னும் காற்று வெளித் தோன்ற; நின்ற அண்ணல் பெரியோன் - சீறி நின்ற தலைமைப்பாடு உடைய இலக்குமணன்; தனது ஆதியின் மூர்த்தி ஒத்தான் - தனது பூர்வ வடிவமாகிய (ஆயிரம் தலை உடைய) ஆதி சேடனைப் போன்றிருந்தான்.

“நெற்றியில் கற்றை நாற” என்பதற்கு நெற்றி மேல் புருவமயிர் தொகுதி தோன்ற என உரைக்கலாம். சீற்றம் மிக்குழிப் புருவம் நெரிந்து நெற்றிமேல் ஏறல் மெய்ப்பாடாம்; இங்கே நாற என்பது தோன்ற என்னும் பொருள் பெறும். “புன்புல மயிரும் பூவாக கட்புலம் புறத்து நாறா வன்பறழ்' என்புழிப் (4740.) போல. இலக்குவன் ஆதிசேடனது அவதாரம் ஆதலின் “ஆதியின் மூர்த்தி” என்றார். அரவின் சீற்றம் போன்றது இலக்குவன் சீற்றம் என்பதாம். சூரியன் நெற்றியில் தோன்றச் சினநெருப்பு ஒளிவீசுதல் சூரியன் போலுதலாகும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Fire spilling from the corners of his eyes, the hair on his brow bristling,
  2. a blazing light like the one that shines in the sky appearing, sweat spreading over his body,
  3. the gale of the breath within him bursting out, standing there,
  4. the noble great one resembled his own original form.

What the poem says

Ilakkuvaṉ's fury is pictured: sparks fly from his eyes, his brows draw up on his forehead, his face blazes like the sun, sweat breaks out on his body, and his breath rushes out like a gale.

He looks like his original form, Ātiśēṣaṉ, the thousand-headed serpent, of whom he is an incarnation. His rage is like the rage of a serpent.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kaṇṇiṉ kaṭait tī uka, neṟṟiyil kaṟṟai nāṟa,
viṇṇil cuṭarum cuṭar tōṉṟa, meyn nīr virippa,
uḷ niṟkum uyirppu eṉum ūtai piṟakka, niṉṟa
aṇṇal periyōṉ taṉatu ātiyiṉ mūrtti ottāṉ.