கம்பராமாயணம் 1796 · அயோத்தியா 4.114
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
“சிங்கக் குருளைக்கு இடு தீஞ்சுவை ஊனை - சிங்கக் குட்டிக்குக் கொடுத்தற்குரிய இனிய சுவையுடைய மாமிசத்தை; வெங்கண் நாயின் சிறு குட்டனை - கொடிய கண்ணை உடைய நாயின் சிறு குட்டிக்கு; ஊட்ட விரும்பினாளே! - உண்பிக்க ஆசைப்பட்டாளே; நங்கைக்கு - கைகேயிக்கு; அறிவின் திறம் நன்று இது! நன்று இது” - புத்தி வன்மையாகிய இது நன்றாயிருந்தது; ' என்னா - எனச் சொல்லி; கங்கைக்கு இறைவன் - இலக்குவன்; கடகக் கை - கடகம் அணிந்த தன்னுடைய கையை; புடைத்து - தட்டி; நக்கான் - சிரித்தான்.
பொருத்தம் அற்ற செயல் செய்தாள் கைகேயி என்பதை இவ்வாறு கூறினான். சிறுகுட்டனை - குட்டனுக்கு உருபுமயக்கம்; நான்காவதன்கண் இரண்டாவது வந்தது. நன்று இது: இகழ்ச்சிக்குறிப்பு. கங்கைவரை உள்ள நாடு கோசலம் ஆதலின் இலக்குவன் “கங்கைக்கிறைவன்” எனப்பட்டான். இனி சரயு நதிக்கு 'இராமகங்கை' எனும் பெயருண்மையின் அதுபற்றிக் “கங்கைக் கிறைவன் எனப்பட்டான் என்பது ஏற்குமேல் கொள்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'The sweet meat meant for the lion's cub, to the dog's
- fierce-eyed little pup she wished to feed!
- The lady's cleverness is fine indeed! Fine indeed!' he said,
- and the lord of the Gaṅgā struck his braceleted arm and laughed.
What the poem says
Ilakkuvaṉ mocks Kaikēyi's plan: she wants to take the meat meant for a lion's cub and feed it to a fierce little puppy. The kingdom belongs to Irāmaṉ, the lion; Paratan, in his anger, is the pup.
He slaps his arm and laughs in scorn. He is called lord of the Gaṅgā because the Kōcala kingdom stretches to that river, or because the Sarayū was also known as Irāma's Gaṅgā.