கம்பராமாயணம் 1800 · அயோத்தியா 4.118

Section அயோத்தியா காண்டம் / 4. நகர் நீங்கு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

“புவிப் பாவை பரம் கெட - உலகம் என்னும் மகள்தன் சுமை நீங்க; போரில் வந்தோரை எல்லாம் - என்னோடு போர்க்கண் வந்தவர்களை எல்லாம்; அவிப்பானும் - அழிப்பதற்காகவும்; அவித்து - அழித்து; அவர் ஆக்கையை- அவர்களின் உடல்களை; அண்டம் முற்றக் குவிப்பானும்- உலக அண்டமெல்லாம் நிறையக் குவிப்பதற்காகவும்; எனக்கு ஒரு கோவினை - எனக்கு ஒப்பற்ற தலைவனாக உள்ள இராமனுக்கு; கொற்ற மெளலி - வெற்றி பொருந்திய மகுடத்தை; கவிப்பானும் - சூட்டுதற்காகவும்; நின்றேன் - (இப்போது ஆயத்தமாக) நிற்கின்றேன்; இது காக்குநர் காமின்” - இதைத் தடுத்துக் காத்துக்கொள்ளக் கூடியவர்கள் காப்பாற்றிக்கொள்ளுங்கள்; ' என்றான்.

இது கைகேயியையும் அவளைச் சார்ந்தோரையும் நோக்கிக் கூறியதாகக் கொள்க. 'காக்குநர் - படர்க்கை. காமின் - முன்னிலை இட வழுவமைதி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'To lift the burden from the maiden Earth, to destroy all who come to fight,
  2. and having destroyed them, to heap up their bodies till they fill the universe,
  3. and to set the victorious crown on my one and only king,
  4. here I stand; let those who can prevent it, prevent it!' he said.

What the poem says

Ilakkuvaṉ issues his challenge, aimed at Kaikēyi and her supporters. He stands ready to relieve the Earth of her burden by killing everyone who opposes him, piling their corpses to fill the world, and to place the crown on Irāmaṉ, his only lord.

Let anyone who can stop him try. The commentary notes the shift from third person to second in 'those who can... prevent it'.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1puvip pāvai param keṭa, pōril vantōrai ellām
avippāṉum avittu avar ākkaiyai aṇṭam muṟṟak
kuvippāṉum, eṉakku oru kōviṉaik koṟṟa mauli
kavippāṉum, niṉṟēṉ; itu kākkunar kāmiṉ!' eṉṟāṉ.