கம்பராமாயணம் 1803 · அயோத்தியா 4.121

Section அயோத்தியா காண்டம் / 4. நகர் நீங்கு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1வேற்றுக் கொடியாள் விளைவித்த வினைக்கு விம்மித் ,
தேற்றத் தெளியாது அயர் சிற்றவை பால் இருந்தான் ,
ஆற்றல் துணைத் தம்பிதன் வில் புயல் , அண்ட கோளம்
கீற்று உற்று உடையப் படும்நாண் உருமேறு கேட்டான் .

பொருள் · Meaning in Tamil

வேற்றுக் கொடியாள் - மனம் வேறுபட்ட கொடியவளான கைகேயி; விளைவித்த வினைக்கு - உண்டாக்கிய துன்பச் செயலுக்கு; விம்மி - கலங்கி; தேற்ற - ஆறுதல் கூறவும்; தெளியாது - மனம் சமாதானம் அடையாமல்; அயர் - சோர்கின்ற; சிற்றவைபால் இருந்தான் - சுமித்திரையாகிய சிற்றன்னையிடத்தே இருந்தவனாகிய இராமன்; ஆற்றல் - வலியிற் சிறந்த; துணைத் தம்பிதன்- தனக்குத் துணையாகிய இலக்குவனது; வில்புயல் - வில் என்கிற மேகத்திருந்து; அண்ட கோளம் - உலக உருண்டை; கீற்று ஒத்து உடைய - கீறு கீறாகப் பிளவுபட்டுத் தரும்படி; படும் - உண்டாகிய; நாண் உரும் ஏறு - நாணொலியாகிய இடியேற்றொலியை; கேளா - கேட்டு.

இராமன் சுமித்திரை மாளிகை சென்றதை இப்படலத்து இருபத்தெட்டாம் பாடலிற் காண்க. கேளா - செய்யா என்னும் வாய்ப்பாட்டு வினையெச்சம். அது “வந்தான் என அடுத்த பாட்டில் முடியும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. He who was with his stepmother, who, sobbing at the deed wrought by the hostile, cruel woman,
  2. could not be consoled however he comforted her and lay faint,
  3. hearing the thunderbolt of the bowstring from the cloud of the bow
  4. of his strong companion brother, that seemed to split the globe of the world into strips,

What the poem says

Irāmaṉ has been at Cumittirai's palace, trying in vain to comfort his stepmother, who is overcome by what Kaikēyi has done.

There he hears the thunderous twang of Ilakkuvaṉ's bowstring, as if from a storm cloud, loud enough to crack the world apart. The sentence completes in the next verse with 'he came'.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vēṟṟuk koṭiyāḷ viḷaivitta viṉaikku vimmi,
tēṟṟat teḷiyātu ayar ciṟṟavaipāl iruntāṉ,
āṟṟal tuṇait tampitaṉ vil puyal, aṇṭa kōḷam
kīṟṟu ottu uṭaiyap paṭum nāṇ urum ēṟu kēḷā.