கம்பராமாயணம் 1804 · அயோத்தியா 4.122
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வீறு ஆக்கிய பொன் கலன் வில்லிட - அழகிற் சிறந்த பொன்னால் ஆகிய அணிகலன் ஒளி வீச; ஆரம் மின்ன - (மார்பில்) முத்ததுவடம் ஒளிவிட்டு விளங்க; கால்தாக்க - புயற்காற்று வீச; நிமிர்ந்து - மேல்நோக்கி; புகைந்து - புகை பொங்கி; கனன்று - எரிந்து; பொங்கும் - மேலும் மிகுகின்ற; ஆறாக்கனல் - அணையாத நெருப்பை; ஆற்றும் - அணைக்கின்ற; ஓர் அஞ்சன மேகம் என்ன - ஒருமை போலும் கரிய மேகம் போல; மாறா - மாறுபடாத; தனிச் சொல் மாரித்துளி - ஒப்பற்ற சொல்லாகிய மழைத் துளியை; வழங்கி - சொல்லிக்கொண்டு; வந்தான் -
நெருப்பு - இலக்குவன் சீற்றம். அது தணிக்குஞ் சொல் மழைத்துளி வழங்கும் அஞ்சன மேகம் இராமன் என உருவகம் கொள்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- His splendid golden ornaments flashing like bows, his pearl necklace gleaming,
- he came, pouring a rain of unchanging, matchless words,
- like a dark collyrium-black cloud that quenches an unquenchable fire
- which, struck by the wind, leaps up, smokes, blazes and surges.
What the poem says
Irāmaṉ hurries to his brother, his jewels and necklace flashing, speaking calm words that never waver.
The image: Ilakkuvaṉ's anger is a raging fire whipped up by the wind, smoking and blazing, and Irāmaṉ is a dark raincloud whose drops of gentle speech put it out.