கம்பராமாயணம் 1805 · அயோத்தியா 4.123

Section அயோத்தியா காண்டம் / 4. நகர் நீங்கு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1மின் ஒத்த சீற்றக் கனல் விட்டு விளங்க நின்ற ,
பொன் ஒத்த மேனிப் , புயல் ஒத்த தடக்கையான் ஐ ,
'என் அத்த ! என் , நீ , இறையேனும் முனிவு இலாதாய் ,
சன்னத்தன் ஆகித் தனு ஏந்துதற்கு ஏது ? ' என்றான் .

பொருள் · Meaning in Tamil

மின் ஒத்த சீற்றக் கனல் விட்டு விளங்க நின்ற - மின்னலைப் போன்று கோபநெருப்பு விட்டுப் பிரகாசிக்கும்படி நின்றுகொண்டிருந்த; பொன் ஒத்த மேனி - பொன்னிறமான திருமேனியையும்; புயல் ஒத்த தடக் கையானை - மேகம் போன்று வாரி வழங்கும் வண்மையுடைய பெரிய கையினையும் உடைய இலக்குவனை (நோக்கி); “என் அத்த - என் தலைவனே!; இமையோரை முனிந்திலாதாய் - (இவ்வாறு நிகழ்தற்கு மூலமாகிய - ஏதுவாகிய) தேவர்களைக் கோபிக்ககாதவனாகிய; நீ -; சன்னத்தன் ஆகி - யுத்தமுனைப்புடையவனாய்; தனு ஏந்துதற்கு ஏது என்?” - வில்லை ஏந்துதற்குக் காரணம் என்ன; என்றான் -

அத்த என்பது அன்புபற்றி வந்த உயர்சொல். “இவ்வாறு எல்லாம் நிகழத் தேவர்களே மூலகாரணம். அவர்களை வெறாத நீ இப்பொழுது வில் ஏந்த என்ன காரணம்' என்று வினவியதாகக் கொள்க. “இறையேனும் முனிந்திலாதாய்' என்ற பாடம் இவ்விடத்தில் சிறப்புடையது. சிறிதளவேனும் எப்பொழுதும் கோபம் வராத சாந்தமூர்த்தியாக விளங்கும் நீ இன்று சினம் மூண்டு வில் ஏந்தக் காரணம் என்ன என்று கேட்டதாக உரைக்கப் பொருள் சிறத்தல் காண்க. அது பின்னர் “அறம் வற்றிட ஊழ் வழுவுற்ற சீற்றம் விளையாத நிலத்து உனக்கு எங்ஙன் விளைந்தது?” (1730) என வருவதனோடும் பொருந்துமாறும் காண்க. இனித் தேவர்களிடம் பெரிய பக்தி உடைய நீ - அவர்களை முனியாத நீ இன்று வில் ஏந்தக் காரணம் என்ன என்று கூறியதாகக் கொண்டு முன்னர் இப்படலத்தது 118 ஆம் பாடலாற் கூறிய இலக்குவன் வார்த்தை செவிப்பட்டு இராமன் கூறுவதாகவும் கொள்ளப் பொருள் ஒன்றும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. To him who stood shining as the fire of his anger flashed like lightning,
  2. he of the golden body and of the great hands like rainclouds,
  3. he said, 'My lord! Why is it that you, who were never angry with the gods,
  4. have armed yourself and taken up your bow?'

What the poem says

Irāmaṉ finds Ilakkuvaṉ blazing with anger, golden-bodied and generous-handed, and asks him gently why he, who never resented the gods, now stands armed with his bow.

The commentary explains: the gods are the root cause of these events, so Irāmaṉ asks why his brother, who did not blame them, is angry now. It also notes a variant reading, 'you who were never angry at all', which suits the later line asking how anger arose in one who had none.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1miṉ otta cīṟṟak kaṉal viṭṭu viḷaṅka niṉṟa,
poṉ otta mēṉip, puyal otta taṭak kaiyāṉai,
'eṉ atta! eṉ, nī, imaiyōrai muṉintilātāy,
caṉṉattaṉ ākit taṉu ēntutaṟku ētu?' eṉṟāṉ.