கம்பராமாயணம் 1808 · அயோத்தியா 4.126

Section அயோத்தியா காண்டம் / 4. நகர் நீங்கு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

இளையான் - இலக்குவன்; இது கூற - இதனைச் சொல்ல; இராமன்-; “இயைந்த நீதி வளையாவரும் நல்நெறி நின் அறிவு ஆகும் அன்றே? - அரசர்க்குப் பொருந்திய நீதிக்குச் சிறிதும் மாறுபடாத நல்ல வழியிற் செல்லுவது நின் அறிவாகும் அல்லவா; ஊழ் வழுவுற்ற சீற்றம்- முறைமைக்கு மாறாக உள்ள கோபம்; விளையாத நிலத்து - உண்டாகாத உன் மனத்தில்; அறம் உளையா வற்றிட - தருமம் மனம் வருந்திக் கெடும்படி; உனக்கு விளைந்தது எங்ஙன்? - உனக்கு உண்டாகியது எவ்வாறு; என்றான்.

விளையாத நிலத்து - உண்டாகாத குடும்பத்தில் என்று பொருள் உரைத்து, “வாய்மையும் நீதிமுறைமையும் சிறிதும் தவறாத தயரத மன்னன் வழியில் வந்த உனக்கு எப்படி முறை தவறிய சீற்றம் விளைந்தது' என்று கேட்டதாக உரைப்பதும் ஒரு பொருள் உண்டு. இராமனது பண்பு நலத்துக்கு அவன் அவ்வாறு கூறியதாகக் கேட்டு பொருந்தாமையின் அவ்வுரை சிறவாதாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. When the younger one said this, Irāmaṉ said, 'Is it not your wisdom
  2. to walk the good path that never bends from fitting justice?
  3. So that dharma withers in pain, this anger that strays from right order,
  4. in soil where it never grows, how has it grown in you?'

What the poem says

Irāmaṉ gently rebukes his brother. Ilakkuvaṉ's nature has always been to follow the straight path of justice; his heart is ground where unjust anger never grows.

How then has such anger sprung up in him now, an anger that would make dharma itself wither? The commentary mentions, and rejects as unworthy of Irāmaṉ, a reading that takes the 'soil' to mean Tacarataṉ's family.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1iḷaiyāṉ itu kūṟa, irāmaṉ, 'iyainta nīti
vaḷaiyāvarum nal neṟi niṉ aṟivu ākum aṉṟē?
uḷaiyā aṟam vaṟṟiṭa, ūḻ vaḻuvuṟṟa cīṟṟam,
viḷaiyāta nilattu, uṉakku eṅṅaṉ viḷaintatu?' eṉṟāṉ.