கம்பராமாயணம் 1809 · அயோத்தியா 4.127
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
நீண்டான் - நெடியோனாய இராமன்; அது உரைத்தலும் - அச்சொற் கூறுதலும்; நித்திலம் தோன்ற நக்கு - (இலக்குவன்) பற்கள் வெளித் தோன்றச் சிரித்து; “சேண்தான் தொடர் மாநிலம் நின்னது” என்று உந்தை செப்ப - நெடுந்தூரம் பற்றியுள்ள அகன்ற பெரிய கோசல அரசு உன்னுடையது என்று உன் தந்தை சொல்ல; பூண்டாய் - சரி என்று அதனை மேற்கொண்டாய்; பகையால் - பகைவர்களால்; “இழந்து வனம் போதி என்றால் - அரசை இழந்து காட்டிற்குச் செல்' என்று சொன்னால்; அடியேற்கு - அடியேனுக்கு; சீற்றம் அடுப்பது - கோபம் உண்டாவது; இனி யாண்டோ' - இனி எந்த இடத்திலோ; ' என்றான்.
இராமனை வனம் போகச் சொன்ன கோபம் கொண்டு எந்தை என்னாமல் தயரதனை “உந்தை' என்றான். சொன்ன சொல்லைப் பகையாளர் பேச்சைக் கேட்டு மாற்றிய இவ்விடத்தில் அல்லவா கோபம் வரவேண்டும். வேறு எவ்விடத்தில் இனிக் கோபம் விளைவது? என்றான் இலக்குவன் என்க. நித்திலம் - முத்து, இங்கே பற்களைக் குறித்தது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- When the tall one said this, laughing so that his pearl-like teeth showed,
- he said, 'When your father declared, "The great land stretching far is yours,"
- you accepted it; if now, through enemies, you are told, "Lose it and go to the forest,"
- then where else could anger ever arise in me, your servant?'
What the poem says
Ilakkuvaṉ laughs bitterly. Their father publicly gave Irāmaṉ the vast kingdom and Irāmaṉ accepted it; now, at the urging of enemies, he is told to give it up and go to the forest.
If this does not justify anger, he asks, what ever could? In his anger he says 'your father' rather than 'my father'. 'Pearls' stands for his teeth.