கம்பராமாயணம் 1811 · அயோத்தியா 4.129
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மின் குற்று ஒளிரும் வெயில் தீக் கொடு அமைந்த வேலோய்! - மின்னலை வென்று விளங்குகின்ற வெயிலையும் நெருப்பையும் கொண்டு செய்யப் பெற்ற வேலை உடைய இலக்குவனே; கொற்ற மன்னன் - வெற்றியுடைய தயரதன்; முன் -; “முடிகொள்க” என - மகுடத்தைச் சூடி அரசு ஏற்க எனச் சொல்ல; “அரசு பின் மன்னும் குற்றம் பயக்கும்” என்றல் பேணேன் - அரசாட்சி பிறகு மிகுதியும் நமக்குக் குற்றங்களை உண்டாக்கும் என்று கருதாமல்; கொள்ள மூண்டது - ஏற்றுக்கொள்ள முயன்றது; என்குற்றம் அன்றோ? - (இதில்) பகைவன்மை அழிக்கும் தயரதனாகிய மன்னவனது தவறு யாதுளது. '
ஆராயாமல் அரசு ஆள ஒப்புக்கொண்டது என் தவறுதானே அன்றி, அளித்தவன்மேல் தவறு இல்லை என்றான் இராமன். அரசு பலர் ஆசைப்படக் கூடிய ஒன்று. இதனாற் பின்னர்ப் பல தீமைகள் விளையும் என்று நான் கருதாமல் ஒப்புக்கொண்டமையால் என்னைத்தான் தண்டிக்க வேண்டுமே அன்றி, எந்தையைக் குறைகூறல் சரியன்று என்று சமத்காரமாகக் கூறித் தம்பியை அடக்கினான் இராமன் என்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Not considering that kingship brings lasting faults afterwards,
- when earlier the victorious king said, "Take the crown," that I set about taking it,
- is that not my fault? What fault is there in the king who conquers foes,
- you whose spear is made of sunlight and fire that outshine the lightning?'
What the poem says
Irāmaṉ turns the argument round. When the king offered him the crown, he accepted it without considering that kingship, which many desire, brings troubles in its wake.
If anyone is at fault, it is he himself for accepting, not their father for offering. In this clever way he calms his brother. He addresses Ilakkuvaṉ as one whose spear seems forged from sunlight and fire.