கம்பராமாயணம் 1813 · அயோத்தியா 4.131
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
உலையுள் உதிக்கும் உறு தீ என ஊதை பொங்க - (கொல்லன்) உலைக்களத்துள் பிறக்கின்ற மிக்க நெருப்பைப் போல வெப்பமான பெருமூச்சு மேலே பொங்கிவர; “கொதிக்கும் மனம் - வெம்புகின்ற மனத்தை; எங்ஙனம் ஆற்றுவென் - எவ்வாறு தணியச் செய்வேன்; கோள் இழைத்தாள் - தீங்கு செய்தவளாகிய கைகேயியின்; மதிக்கும் மதி ஆய் - அறிவுக்கும் அறிவு தருவதாய்; முதல் வானவர்க்கும் - மும் மூர்த்திகளாய தேவர்களுக்கும்; வலிது ஆம் - வலிமையான; விதிக்கும் விதி ஆகும் - (நீ சொல்லிய) ஊழ்வினையையும் வென்று மாற்ற வல்ல ஊழ் ஆகிய; என் வில் தொழில் காண்டி' - எனது வில்லின் செயலைப் பார்ப்பாயாக; ' என்றான் -.
விதியால் விளைந்தது என இராமன் சொல்ல, அந்த விதியையும் மாற்ற வல்ல விதி என் வில் என்றான் இலக்குவன். துடிக்கின்ற மனத்தை ஆற்ற முடியாமல் திணறுகிறேன் என்ற அவதியை முதலில் வெளிப்படுத்துகிறான்; பின்னர் இதற்கு ஏதாவது முடிவு கண்டால்தான் என் மனம் ஆறும் என்பதாகப் பேசுகிறான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'As the gale of my breath surges like the fierce fire born in the forge,
- how shall I calm my boiling heart? Of her who plotted this evil,
- see my bow's work, which is a mind beyond her mind, mightier than the first gods,
- and a fate even to fate!' he said.
What the poem says
Ilakkuvaṉ cannot be calmed. His breath bursts out like fire from a blacksmith's forge, and he cannot cool his seething heart.
Irāmaṉ blamed fate; Ilakkuvaṉ replies that his bow is a fate that can overrule fate, stronger than the three great gods and wiser than Kaikēyi's scheming. Let Irāmaṉ watch what it can do. He first confesses that he cannot master his heart, then says only action will ease it.