கம்பராமாயணம் 1815 · அயோத்தியா 4.133

Section அயோத்தியா காண்டம் / 4. நகர் நீங்கு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

முற்றா மதியம் மிலைந்தான் - இளம்பிறை அணிந்த சிவபெருமான்; முனிந்தானை - சினங் கொண்ட நிலையடைந்தானை; அன்னான் - ஒத்தவனாகிய இலக்குவன் (இராமனை நோக்கி); “நல்தாதையும் நீ - (எனக்கு) நல்ல தந்தையும் நீ; தனி நாயகன் நீ - ஒப்பற்ற தலைவனும் நீ; வயிற்றில் பெற்றாயும் பிறர் இல்லை நீயே - (என்னைப் பெற்றெடுத்த தாயும் பிறர் யாரும் இல்லை நீயே; பிறர்க்கு நல்கக் கற்றாய் - (எல்லாவற்றையும்) மற்றவர்களுக்குக் கொடுத்து விடக் கற்றவனே; இன்று இது காணுதி - இன்று (நான் உனக்கு அரசைப் பெற்றுத் தருவதாகிய) இதனைப் பார்ப்பாயாக;' என - என்று சொல்லி; கைம் மறித்தான் - (இராமனைத்) தடுத்தான்.

எனக்குத் தந்தையும் தாயும் நீயே, தயரதனும் கைகேயியும் அல்லர்; ஆகையால் உனக்குத் தீமை செய்த அவர்களைத் தண்டிப்பது வேதம் கற்றறிந்தமைக்கு முரணாகாது என்றான் இலக்குவன். இது என்பது “எனது வில் தொழில்' என்று அவன் கூறியதாகக் கொள்ளினும் அமையும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'My good father is you; my one lord is you; the mother who bore me
  2. in her womb is you yourself; there is no other; you who have learned to give all away to others!
  3. Watch this today,' he said, and held him back with his hand,
  4. he who was like the wearer of the young crescent moon in his wrath.

What the poem says

Ilakkuvaṉ, as angry as Civaṉ, who wears the crescent moon, refuses to accept the argument. For him Irāmaṉ is father, lord and mother all in one; Tacarataṉ and Kaikēyi are not his parents in that sense.

So punishing those who wronged Irāmaṉ does not go against the Vedas. Addressing Irāmaṉ as one who has learned only to give everything away, he raises his hand to stop him and tells him to watch what he will do.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'nal tātaiyum nī; taṉi nāyakam nī; vayiṟṟil
peṟṟāyum nīyē; piṟar illai; piṟarkku nalkak
kaṟṟāy! itu kāṇuti iṉṟu' eṉak kaimmaṟittāṉ,
muṟṟā matiyam milaintāṉ muṉintāṉai aṉṉāṉ.