கம்பராமாயணம் 1816 · அயோத்தியா 4.134
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வரதன் - இராமன்; பகர்வான் - கூறுவான்; “வரம் பெற்றவள் தான் - (அரசனுக்குச் சாரதியாய் இருந்து) வரம் வாங்கிக் கொண்டவளாகிய கைகேயியே; இவ்வையம் சரதம் உடையாள் - இவ் வுலக ஆட்சியை மெய்யாகப் பெறுதற்கு உரிமை உடையவளாவாள்; அவள், என் தனித் தாதை செப்பப் பரதன் பெறுவான் - அவளும், என் ஒப்பற்ற தந்தையாகிய தயரதனும் சொல்லப் பரதன் (இவ்வரசாட்சியைப்) பெறுவான்; இனி - அடுத்து; யான் படைக்கின்ற செல்வம் - நான் பெறுகின்ற செல்வம்; விரதம் - தவம் ஆகும்; இதின் நல்லது - இத்தவத்தினும் நன்மையானது; இனி வேறு யாவது? - இனி வேறு என்ன உள்ளது; ' என்றான் -.
நான் இதனை நல்லது என்றும், இதற்கு மேலாக, நன்மை வேறில்லை என்றும் எண்ணுகிறபோது, என்னையே தாயும் தந்தையும் ஆகக் கருதும் நீ என்னுடைய நன்மையைக் கெடுக்க முயற்சிக்கலாமா? என்பது குறிப்பு.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The bestower of boons said, 'She who obtained the boon truly
- owns this world; and as she and my peerless father declare,
- Paratan shall receive it; from now on, the wealth I shall build
- is the vow of penance; what else could be better than this?'
What the poem says
Irāmaṉ, the giver of boons, explains. Kaikēyi, who won the boon, now truly owns the kingdom, and by her word and their father's, Paratan will receive it.
The wealth Irāmaṉ will gather is ascetic discipline, and nothing could be better. The implied question: if Ilakkuvaṉ truly regards him as father and mother, how can he try to spoil what Irāmaṉ himself considers his greatest good?