கம்பராமாயணம் 1817 · அயோத்தியா 4.135

Section அயோத்தியா காண்டம் / 4. நகர் நீங்கு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1ஆன்றான் பகர்வான் பினும் , 'ஐய இவ் வையம் மையல்
தோன்றா நெறி வாழ் துணைத் தம்பியைப் போர் தொலைத்து ஓ ?
சான்றோர் புகழ் நல் தனித் தாதையை வாகை கொண்டு ஓ ?
ஈன்றாளை வென்றோ ? இனி இக் கதம் தீர்வது என்றான் .

பொருள் · Meaning in Tamil

ஆன்றான் - குணங்களால் உயர்ந்து அமைந்தவனாகிய இராமன்; பினும் பகர்வான் - மேலும் சொல்வான்; “ஐய! - ஐயனே; இவ் வைய மையல் தோன்றா நெறி வாழ் - இந்த உலக அரசாட்சி என்கின்ற மயக்கம் அற்ற நன்னெறியில் இருந்து கொண்டுள்ள; துணைத் தம்முனை - உன்னுடைய துணையாகிய அண்ணனைப் (பரதனை); போர் தொலைத்தோ? - சண்டையில் தோல்வியடையச் செய்தோ; சான்றோர் புகழும் தனித் தாதையை வாகை கொண்டோ? - பெரியோர்களாற் புகழப்பெறும் ஒப்பற்ற நம் தந்தையாகிய தயரதனை வெற்றி கொண்டோ; ஈன்றாளை வென்றோ? - பெற்ற தாயை (கைகேயியை) வெற்றி கொண்டோ; இக்கதம் - (உனக்கு வந்துள்ள) இக் கோபம்; இனித் தீர்வது?” - இனி நீங்குவது; ' என்றான்.

அரசாட்சி பரதனுக்குக் கிடைத்திருப்பது என்பதெல்லாம் அயோத்தியில் உள்ளார் அறிந்தனவே. கேகய நாட்டில் உள்ள பரதனுக்கு அச்செய்தி இன்னும் தெரியாது ஆகலின், 'இவ் வையம் என்கிற மையல் அறியப்படாத கேகய நாட்டில் வாழும் உன் அண்ணனாகிய பரதனை' என்றும் இராமன் கூறியதாகக் கொள்க. “எள்ளரிய குணத்தால்' இராமனையே அனையவன் பரதன் ஆகையால், இராமனுக்கு அரசில் ஆசையின்றிச் சன்மார்க்கத்தில் ஆசை செல்லுமாப் போல; பரதனும் வைய மையலின்றி நன்னெறியில் வாழ்கின்றவன்' என்பது உரைவிளக்கமாகும். 134

இலக்குவன் சினம் அடங்கல்

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The perfect one spoke again: 'Brother, is it by destroying in battle your companion elder brother,
  2. who lives on the path where the delusion of this world does not appear?
  3. Or by defeating our peerless father, whom the noble praise?
  4. Or by conquering her who bore us, that this anger of yours will now subside?' he said.

What the poem says

Irāmaṉ, perfect in virtue, presses further. Whom does Ilakkuvaṉ mean to fight? Paratan, his elder brother, who knows nothing of all this and lives free of the craving for kingship? Their father, praised by the wise? Or Kaikēyi, their mother?

Which of these victories will satisfy his anger? The commentary notes that Paratan, away in the Kēkaya country, has not even heard the news, and that he is as free of greed for power as Irāmaṉ.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1āṉṟāṉ pakarvāṉ piṉum, 'aiya iv vaiya maiyal
tōṉṟā neṟi vāḻ tuṇait tammuṉaip pōr tolaittō?
cāṉṟōr pukaḻum taṉit tātaiyai vākai koṇṭō?
īṉṟāḷai veṉṟō? iṉi ik katam tīrvatu eṉṟāṉ.