கம்பராமாயணம் 1819 · அயோத்தியா 4.137

Section அயோத்தியா காண்டம் / 4. நகர் நீங்கு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1நன் சொற்கள் தந்து ஆண்டு எனைநாளும் வளர்த்த தாதை
தன் சொல் கடந்து எற்கு அரசு ஆள்வது தக்கது அன்று ஆல்
என் சொல் கடந்தால் உனக்கு யாதுளது ஈனம் ? என்றான் ;
தென் சொல் கடந்தான் வடசொல் கலைக்கு எல்லை தேர்ந்தான் .

பொருள் · Meaning in Tamil

தென்சொல் கடந்தான் - தமிழ் மொழியின் எல்லை கண்டவனாம்; வடசொல் கலைக்கு எல்லை தேர்ந்தான் - வடமொழிச் சாத்திரங்களின் முடிவிடத்தை ஆராய்ந்து அறிந்தவனும் ஆகிய இராமன் (இலக்குவனை நோக்கி); “நன் சொற்கள் தந்து ஆண்டு எனை நாளும் வளர்த்த தாதை தன் - இன் மொழிகள் பேசி என்னைப் பாதுகாத்து என்னை நாளும் வளர்த்ததுவந்த தந்தை தயரதனது; சொல் கடந்து - சொற்களை மீறி; அரசு ஆள்வது - அரசு ஆட்சி செய்வது என்பது; எற்கு - எனக்கு; தக்கது அன்று - தகுதியான செயல் அன்று; (ஆனால் உனக்கு) என் சொல் கடந்தால் - (நீ தந்தையும் தாயும் என்று கருதும்) என்னுடைய சொல்லை மீறினால்; யாது உளது ஊற்றம்?” - என்ன நன்மை வந்துவிடும் (ஒன்றும் வராது); என்றான் -

“என்னைத் தந்தையும் தாயும் என்று நீ கருதுவது உண்மையாயின் என் சொல்லை மீறுவது உனக்கும் தகாது' என்று கூறுவதாகக் கருத்துக் கொள்ளல் வேண்டும். ஆல் அசை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'For me to go against the word of my father, who with good words
  2. ruled me and raised me every day, and rule the kingdom is not fitting;
  3. and if you go against my word, what good is there in it for you?' said
  4. he who had gone beyond the southern tongue and mastered the northern lore to its limit.

What the poem says

Irāmaṉ, master of both Tamil and Sanskrit learning, sets out the chain of obedience. For him to rule by defying the father who raised him lovingly would be wrong.

And if Ilakkuvaṉ truly sees Irāmaṉ as father and mother, then for him to defy Irāmaṉ's word would be equally wrong, and could bring him no good.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1naṉ coṟkaḷ tantu āṇṭu eṉai nāḷum vaḷartta tātai
taṉ col kaṭantu eṟku aracu āḷvatu takkatu aṉṟāl
eṉ col kaṭantāl uṉakku yātu uḷatu ūṟṟam? eṉṟāṉ;
teṉcol kaṭantāṉ vaṭacol kalaikku ellai tērntāṉ.