கம்பராமாயணம் 1821 · அயோத்தியா 4.139
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
ஐயனும் - இராமனும்; ஆதியொடு அந்தம் ஒன்றாம் தன்னாலும் அளப்ப அருந் தானும் - முதலும் முடிவும் ஒன்றாக உள்ள தன்னாலும் வரையறுத்துக் கூறமுடியாதுள்ள திருமாலாகிய தானும், தன் பாங்கர் பொன்னிறமான மான் தோலை உடைய சிவபிரானும்; தழீஇ என - தழுவிக் கொண்டாற் போல; அன்னான் தனை - அந்த இலக்குவனை; புல்லி - தழுவி; பின்னை - பிறகு; மாண்பு உடை சொல் அன்னை - மாட்சிமை உடைய சொற்களை உடையளாகிய சுமித்திரைத் தாயின்; கோயில் புக்கான் - மாளிகையை அடைந்தான்.
இராமன் இலக்குவனைத் தழுவிய காட்சி திருமால் சிவபெருமானைத் தழுவி நின்றது போலும் என்றார். இலக்குவன் பொன்னிற மேனியன் ஆதலின் பொன்னிறமான மான் உரி போர்த்த சிவபிரான் போல ஆயினன். ஆதியும் அந்தமும் இல்லாத என்பதனை “ஆதியும் அந்தமும் ஒன்றாகும்” என்றார். ஆதி வேறு அந்தம் வேறு என்றால் ஆதி அந்தம் இரண்டாகி உண்டு என ஏற்படும். ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதி” (திருவா. திருவெம். 1) என்று இறை இயல்பு இவ்வாறே பேசப்படுதல் காண்க. “தன் பெருமை தான் அறியாத தன்மையன்” என்கிறபடி உள்ளவன் ஆதலின் தன்னாலும் அளப்பருந் தானும்” என்றார். “தானும் காண்கிலன் இன்னமும் தன் பெரும்தலைமை' என்று (கந்த. சூரன் அமைச்சியல் - 128) சிங்கமுகன் சூரபதமனுக்கு முருகனைப்பற்றிக் கூறுவதும் காண்க. திருமாலும் சிவனும் இணைந்துள்ள காட்சியை ஆழ்வார்கள் அனுபவித்துக் கூறியுள்ளனர். “அரன் நாரணன் நாமம் ஆன் விடை புள் ஊர்தி, உரைநூல் மறை உறையும்கோயில் - வரைநீர் கருமம் அழிப்பு அளிப்புக் கையது வேல் நேமி, உருவம் எரி கார்மேனி ஒன்று' (திவ்ய. 2080) தாழ் சடையும் நீள் முடியும் ஒண் மழுவும் சக்கரமும், துழாயும்பொன்னாணும் தோன்றுமால் - சூழம், இரண்டு அருவிபாயும் திருமலைமேல் எந்தைக்கு இரண்டு உருவும் ஒன்றாய் இசைந்து ' (திவ்ய. 2344.) என்ற முதலாழ்வார் பாசுரங்களை இங்கே காண்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The lord embraced him, as if he who cannot be measured even by himself,
- in whom beginning and end are one, were embracing
- him of the golden deerskin who stood at his side; and then
- he entered the palace of his mother Cumittirai, of noble speech.
What the poem says
Irāmaṉ embraces his brother. The scene is like Tirumāl, without beginning or end and immeasurable even to himself, embracing Civaṉ, who wears a deerskin; golden-skinned Ilakkuvaṉ suits the comparison with Civaṉ.
Then the two go into Cumittirai's palace. The commentary cites the Tiruvempāvai on the god without beginning or end and hymns of the early Āḻvārs that celebrate Tirumāl and Civaṉ united in one form.