கம்பராமாயணம் 1823 · அயோத்தியா 4.141

Section அயோத்தியா காண்டம் / 4. நகர் நீங்கு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1சோர்வாளை ஓடித் தொழுது ஏந்தினன் , துன்பம் என்னும்
ஈர்வாளை வாங்கி மனம் தேற்றுதற்கு ஏற்ற செய்வான் ,
'போர்வாள் அரசர்க்கு இறை பொய்த்தனன் ஆக்க கில்லேன்
கார்வான் நெடும் கான் இறை கண்டு இவண் மீள்வன் ' என்றான் .

பொருள் · Meaning in Tamil

சோர்வாளை - தளர்கின்ற சுமித்திரையை; தொழுது - (இராமன்) மத வணங்கி ஓடி ஏந்தினன் - விரைந்து சென்று தாங்கிக்கொண்டான்; துன்பம் என்னும் ஈர் வாளை வாங்கி - (அவளது) துயர் என்கிற மனத்தை அறுக்கும் வாளை வெளியே எடுத்து; மனம் தேறுதற்கு - மனம் தெளிவடைவதற்கு; ஏற்ற செய்வான் - தக்க செயல்களைச் செய்பவனாய்; “போர் வாள் அரசர்க்கு இறை - போர் செய்வதில் வல்ல வாளை உடைய சக்கரவர்த்தியை; பொய்த்தனன் ஆக்ககில்லேன் - சத்தியம் தவறியவனாகச் செய்யமுடியாதவனாய் உள்ளேன்; கார்வான் நெடுங்கானம் - கரிய மேகம் சூழ்ந்த பெரிய காட்டை; இறை கண்டு - சிறிது பார்த்துவிட்டு; இஙன் மீள்வென்” - இவ்விடத்தே திரும்புவேன்; என்றான் -.

“இறை” என்பது சிறிது நேரம் என்பதாம். அவள் மனம் தேறச் சொல்கின்றான் ஆதலின் 14 ஆண்டுகளை “இறை” எனக் கூறினான். இஙன் - இங்ஙன் என்பதன் விகாரம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. He ran to her as she fainted, bowed, and held her up; drawing out
  2. the cutting sword called grief, and doing all that would help her heart to calm,
  3. he said, 'I will not make the king of kings with war-swords a breaker of his word;
  4. I will look a little at the long forest under dark clouds and come back here.'

What the poem says

Irāmaṉ runs to his stepmother, bows, and lifts her up. He draws out the sword of sorrow that is cutting into her heart and does all he can to comfort her.

He will not let his father be called a liar, he says; he will just take a short look at the great forest and come home. The commentary notes that to ease her mind he calls fourteen years 'a little while'.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1cōrvāḷai ōṭit toḻutu ēntiṉaṉ, tuṉpam eṉṉum
īr vāḷai vāṅki maṉam tēṟutaṟku ēṟṟa ceyvāṉ,
'pōr vāḷ aracarkku iṟai poyttaṉaṉ ākkakillēṉ
kārvāṉneṭuṅ kāṉ iṟai kaṇṭu ivaṇ mīḷveṉ' eṉṟāṉ.