கம்பராமாயணம் 1826 · அயோத்தியா 4.144

Section அயோத்தியா காண்டம் / 4. நகர் நீங்கு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1கார் வானம் ஒப்பான் தனை காண்தொறும் காண்தொறும் போய்
நீராய் உகு கண்ணினும் நெஞ்சு அழிகின்ற நீரார்
பேரா இடர்ப் பட்டு அயலார் உறு பீழை கண்டும்
தீரா மனத்தாள் தர வந்தன சீரம் என்றார் .

பொருள் · Meaning in Tamil

கார் வானம் ஒப்பான்தனை - மழை மேகத்தை ஒத்த கருமையும் தண்மையும் உடைய இராமனை; காண்தொறும் காண்தொறும் - பார்க்கப் பார்க்க; கண்ணினும் போய் - பார்க்கின்ற கண்ணைக் காட்டிலும் போய்; நீர் ஆய் உக - நீராகிச் சிந்த; நெஞ்சு அழிகின்ற நீரார் - மனம் கெட்டு வருந்துகின்ற தன்மையுடைய ஏவல் மகளிர் (இராமனைப் பார்த்து) “பேரா இடர்ப்பட்டு - நீங்க முடியாத துன்பப் பட்டு; அயலார் உறு பீழை கண்டும் - அயலார்கள் படுகின்ற துன்பத்தைக் கண்டு வைத்தும்; தீரா மனத்தாள் - தன் கொள்கையிலிருந்து நீங்காத மனம் உடைய கைகேயி; தர - கொடுத்தனுப்ப; வந்தன சீரம் - வந்தனவாகிய மரவுரி இவை; என்றார் -

நேரில் இராமனைக் காணும்போது மேலும் நெஞ்சு புண்ணாகிறது அச்சேடியர்களுக்கு. சேடியரது உள்ளத் துயர் இப்பாடலில் தெள்ளத் தெளிவு ஆகும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Each time they looked at him who was like the dark raincloud, their hearts
  2. flowed out as water even more than their eyes, and they, melting away,
  3. said, 'These are the bark garments sent by her whose mind does not relent
  4. even when she sees the anguish of others sunk in grief that will not lift.'

What the poem says

Each time the maidservants look at Irāmaṉ, dark and cool as a raincloud, their hearts melt and flow out faster than their tears.

They tell him these bark garments come from Kaikēyi, whose resolve does not waver even when she sees how others suffer. Seeing him face to face only deepens their pain.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kār vāṉam oppāṉtaṉaik kāṇtoṟum kāṇtoṟum pōy
nīr āy uka kaṇṇiṉum neñcu aḻikiṉṟa nīrār
pērā iṭarppaṭṭu ayalār uṟu pīḻai kaṇṭum
tīrā maṉattāḷ tara vantaṉa cīram eṉṟār.