கம்பராமாயணம் 1830 · அயோத்தியா 4.148
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
பின்னும் - மேலும்; பகர்வாள் - கூறுவாள்; “மகனே! -; இவன்பின் செல் - இந்த இராமன் பின்னால் செல்வாயாக; தம்பி என்னும்படி அன்று - இவன் தம்பி என்கின்ற முறையில் நடந்துகொள்ள அன்று; அடியாரினின் ஏவல் செய்தி - இவன் தொண்டர்களைப் போல இவன் இட்ட பணிகளைச் செய்; மன்னும் நகர்க்கே - நிலைபெற்ற அயோத்தி நகரத்துக்கு; இவன் வந்திடின் வா - இவன் திரும்பி வருவானாயின் நீயும் வருக; அது அன்றேல் - இவன் அயோத்திக்கு வரமுடியாமல் போகுமானால்; முன்னம் முடி” - இவனுக்கு முன்னம் நீ உயிரைத் துறந்துவிடு; ' என்றனள் - என்று கூறி; வார் விழி சோர நின்றாள் - நீண்ட கண்களிலிருந்து நீர் பெருக நின்றாள்.
சுமித்திரை தன் மகனுக்குத் தந்த இவ் அறிவுரை நினைக்க நினைக்கப் பெருமிதம் தருவதாகும். இராமனுக்கு ஏதேனும் ஆபத்து வரின் அதனைத் தடுக்க உன் உயிரை விடவும் தயங்காதே என்றாள், “முன்னம் முடி' என்ற சொல்லால். “இந் நெடுஞ் சிலைவலானுக்கு ஏவல் செய் அடியன் யானே' என்று (3778.) அனுமனிடம் இலக்குவன் பின்னர்த் தன்னை அறிமுகப் படுத்திக்கொள்வதும் காண்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- She spoke again: 'My son! Go after him, not in the manner
- of a younger brother, but serve him as one of his servants;
- if he comes back to the lasting city, come back; if not,
- die before him,' she said, and stood with tears streaming from her long eyes.
What the poem says
Cumittirai adds her final charge. Ilakkuvaṉ must follow Irāmaṉ not as a brother but as a servant, doing whatever he is told.
If Irāmaṉ returns to Ayōttī, Ilakkuvaṉ may return too; if not, he must die before him, meaning he must give his own life to shield Irāmaṉ from danger. Then she stands weeping. The commentary recalls that Ilakkuvaṉ later introduces himself to Aṉumaṉ as the servant of the great archer.