கம்பராமாயணம் 1831 · அயோத்தியா 4.149
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
இருவரும் தொழுதனர் - இராம இலக்குவர்கள் இருவரும் (தாயை) வணங்கினர்; தாயும் - சுமித்திரையும்; இரண்டு கன்று ஒரீஇ வெருவரும் ஆவினின் - இரண்டு கன்றுகளை நீங்கி அஞ்சுகின்ற பசுப்போல; விம்மினாள் - மனம் கலங்கித் துடித்தாள்; பொரு அரும் குமரரும் - ஒப்பற்ற மைந்தர்களும்; புறம் திரு அரைத் துகில் ஒரீஇ, சீரை சாத்திப் போயினார் - உடம்பின் வெளியே அழகிய இடுப்பில் அணிந்திருந்த மெல்லிய ஆடைகளை நீக்கி மரவுரியைத் தரித்துக் கொண்டு சென்றார்கள்.
இரண்டு கன்றுகளைப் பிரிந்த பசுத் துடிக்குமாறு போல இராமனையும் இலக்குவனையும் பிரிகின்ற சுமித்திரை விம்முகிறாள். “திரு அரைத்துகில் ஒரீஇ புறம் சீரை சாத்தி' என இயைக்கலாம். 'ஏ' காரம் ஈற்றசை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The two bowed low; like a cow that, parted from her two calves,
- trembles in fear, the mother sobbed;
- and the peerless princes went forth,
- putting off the fine cloth at their waists and wearing bark garments.
What the poem says
Irāmaṉ and Ilakkuvaṉ take leave of Cumittirai, Ilakkuvaṉ's mother. She sobs like a cow that has lost both its calves at once, for she is losing both the sons she loves. The two princes lay aside their soft palace cloth and put on garments of tree bark, the dress of forest ascetics, before setting out.