கம்பராமாயணம் 1832 · அயோத்தியா 4.150

Section அயோத்தியா காண்டம் / 4. நகர் நீங்கு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

தான் புனை சீரையை - (இராமன்) தான் அணிந்துள்ளது போன்ற மரவுரியை; தம்பி சாத்திட - தம்பியாகிய இலக்குவனும் அணிந்துகொள்ள; தேன் புனை தெரியலான் செய்கை நோக்கினான் - தேன் நிறைந்த மாலை அணிந்த இலக்குவனின் செயலை இராமன் பார்த்து; “வான் புனை இசையினாய்! - தேவருலகம் புகழும் புகழினை உடையாய்; நீ மறுக்கிலாது - நீ மறுக்காமல்; யான் புகல் - நான் சொல்லுகின்ற; இனையது ஓர் உறுதி - இத்தகைய ஒரு நல்ல சொல்லை; கேள்” - கேட்பாயாக; எனா - என்று சொல்லி.

புனை சீரை என்றாரேனும் புனைந்தது போலும் சீரை என்று பொருள் கொள்க. 'தம்பியும் சாத்திட' என்ற எச்சவும்மை வருவித்துரைக்கப்பட்டது. தெரியலான் செய்கை - இலக்குவன் செயல். பார்த்து; முற்றெச்சம். இலக்குவன் செய்ததைப் பார்த்து இராமன் ஒரு கருத்தைக் கூறலானான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As his younger brother put on bark cloth like that which he himself wore,
  2. he of the honey-laden garland watched what he did, and said:
  3. 'You whose fame the heavens adorn! Without refusing,
  4. hear this one counsel that I speak to you.'

What the poem says

Seeing Ilakkuvaṉ dress himself in bark cloth to follow him into exile, Irāmaṉ realises his brother means to come along. Before Ilakkuvaṉ goes further, Irāmaṉ asks him to listen to one piece of advice and not to refuse it. The next verse says what that advice is.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tāṉ puṉai cīraiyait tampi cāttiṭa,
tēṉ puṉai teriyalāṉ ceykai nōkkiṉāṉ;
vāṉ puṉai icaiyiṉāy! maṟukkilātu nī
yāṉ pukal iṉaiyatu ōr uṟuti kēḷ eṉā.