கம்பராமாயணம் 1833 · அயோத்தியா 4.151
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
“அன்னையர் அனைவரும் - (தம்பி!) தாய்மார்கள் எல்லோரும்; ஆழி வேந்தனும் - தயரதனும்; முன்னையர் அல்லர் - முன்பிருந்த நிலைமையில் இருக்கின்றாரல்லர்; வெந் துயரின் மூழ்கினார் - கொடிய துன்பத்தில் முழுகியிருக்கிறார்கள்; என்னையும் பிரிந்தனர் - (இந்நிலையில்) என்னையும் பிரிய உள்ளார்கள். இடர் உறா வகை - இவர்கள் துன்பம் அடையாதபடி; என்பொருட்டு நீ உன்னை உதவுவாய்” - எனக்காக நீ உன்னையே உதவுவாயாக, என்றான் -.
அன்னையர் அனைவரும் - கோசலையும் சுமித்திரையும் ஏனைய உரிமை மகளிரும். இராமன் நோக்கில் கைகேயி விலக்கப்பட்டாள் ஆயினும் “வெந்துயரின் மூழ்கினார்” என்னும் பின்வந்த வினையால் கைகேயி விலக்கப்பட்டாளாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'All our mothers, and the king who rules the wheel of the world,
- are not what they were; they are sunk in burning grief;
- and they are losing me as well. So that no harm befalls them,
- give yourself to help them, for my sake,' he said.
What the poem says
Irāmaṉ asks Ilakkuvaṉ to stay behind in Ayōtti. Their mothers and King Tacarataṉ are overwhelmed by grief and are about to lose Irāmaṉ too; he wants his brother to stay and care for them. The mothers meant are Kōcalai, Cumittirai and the other queens; Kaikēyi, who is not grieving, is plainly not among them.