கம்பராமாயணம் 1842 · அயோத்தியா 4.160
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
“வாழ்வினை நுதலிய மங்கலத்து நாள் - மகுடம் தரித்து அரச வாழ்வு வாழக் கருதப்பெற்ற அதே மங்கல நல் நாளிலே; தாழ்வினை அது வர - தாழ்த்துகின்ற வினையானது வருதலால்; சீரை சாத்தினான்; - இராமன் மரவுரியை அணிந்தான்; சூழ்வினை நான்முகத்து ஒருவன் - விதியை வகுத்து அளிக்கும் பிரம தேவனே; சூழினும் - தவிர்க்கும் வழியை ஆலோசித்தாலும்; ஊழ்வினை - (செய்தவனைச் சென்று அடையும்) அந்த ஊழ்வினை; ஒருவரால் -; ஒழிக்கற்பாலதோ? - நீக்கிக்கொள்ளும் தன்மை உடையதோ? இல்லை என்றபடி.
“ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று, சூழினும் தான் முந்துறும்” என்ற திருக்குறளை இதனோடு ஒப்பிடுக. முன்னர் நிகழ்ச்சியும், பின்னர் உலகொப்பிய ஒரு கருத்தும் ஒத்து வருதலின் வேற்றுப் பொருள் வைப்பணி. விதிக் கடவுளாகிய பிரம தேவனாலேயே ஊழ்வினையைத் தடுக்க இயலாதாயின் வேறு ஒருவராலும் இயலாது என்றபடி. திருமாலின் அவதாரமாகிய இராமனுக்கு வினை என்பது ஒன்றில்லை; ஆயினும், தேவர் வேண்டச் செய்துகொண்ட சங்கற்பம்தானே இம்மனிதவடிவ நிகழ்ச்சியில் வினையாயிற்றென உய்த்து உணர்க. செய்த சங்கற்பம் அவ்வாறே இறைவற்கும் நிகழும்; அதுவும் மாற்ற ஒண்ணாததாம். “ஓ” வினாப்பொருட்டு.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'On the auspicious day meant for his crowning,
- a deed that brings men low arrived, and he put on bark cloth;
- even if the Four-faced One, who devises all fates, should devise against it,
- can the fruit of past deeds be undone by anyone?'
What the poem says
Vacittaṉ reflects to himself. On the very day set for Irāmaṉ's coronation, a reversal has come and he wears an ascetic's bark cloth. If even Piramaṉ, the four-faced creator who ordains destiny, cannot undo the working of fate, no one can.
The thought echoes a well-known couplet of the Tirukkuṟaḷ: nothing is stronger than fate, which gets ahead of every scheme to escape it. A particular event is backed by a general truth, a figure Tamil poetics calls 'support by another matter'. Since Irāmaṉ is Tirumāl incarnate he has no karma of his own; here 'fate' is the vow the god took at the gods' request when he became a man.