கம்பராமாயணம் 1843 · அயோத்தியா 4.161
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
இவ்வினை - இச்சீரை சுற்றிக் காடுபோதலாகிய செயல்; வெவ்வினையவள் தரவிளைந்ததேயும் அன்று - கொடு வினை படைத்த கைகேயி கொடுக்க அவளால் உண்டாகியதும் அன்று; இவன் வயின் எய்தற்பாற்றும் அன்று - வேறொரு வகையால் சத்துவகுண வடிவனாகிய இவன்பால் வரக்கடவதும் அன்று; எவ்வினை நிகழ்ந்ததோ? - எந்தச் செயலால் இப்படி நடைபெற்றதோ?; ஏவர் எண்ணமோ? - யாருடைய மனக்கருத்தால் நடந்ததோ; பின் ஒருமுறை - பிற்காலத்தில் ஒரு படியாக; செவ்விதின் தெரியும்” - நன்கு விளங்கும்; என்றான் - என மனத்துள் சொல்லிக்கொண்டான்.
மெய்யுணர் ஞானியாகிய வசிட்டன் முன்பு “ஈது முன் நிகழ்ந்த வண்ணம் என இதயத்து எண்ணி '(208.) யவன் ஆதலின், இந்நிகழ்ச்சியின் வித்து அவனுக்குத் தெரியும். ஆயினும், அது அப்போது அவனுக்குத் தெரிந்தது; இப்போது மாயையால் ஒன்றும் அறிகிலன் ஆயினன்; அறிவானாயின் இராமனை வேண்டலும், கைகேயியைக் கடிந்துரைத்தலும் முதலியன அவனால் நடைபெறாவாம். அதனாலேயே “எவ்வினை நிகழ்ந்ததோ ஏவர் எண்ணமோ” என இறைமாயையால் முன்னறிந்ததனையே மறந்து அறியாதவன் ஆயினான் என்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'This did not spring merely from what that cruel woman gave;
- nor is this a fate that could ever fall to such a one as he;
- what deed has come to pass? Whose design is this?
- One day, later, it will become plain,' he said.
What the poem says
Vacittaṉ continues musing. This exile cannot be simply Kaikēyi's doing, and it is not the kind of fate that should befall someone as pure as Irāmaṉ. Whose plan is it? In time it will become clear.
Earlier in the epic Vacittaṉ had seen in his mind the divine purpose behind Irāmaṉ's birth. Now, clouded by the god's illusion, he has forgotten it. Otherwise he could not plead with Irāmaṉ or reproach Kaikēyi, as the story needs him to do.