கம்பராமாயணம் 1848 · அயோத்தியா 4.166
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
என்றபின் - இராமன் இவ்வாறு கூறிய பிறகு; முனிவன் - வசிட்டன்; ஒன்று இயம்ப நேர்ந்திலன் - ஒரு வார்த்தையும் சொல்ல இயலாது; நெடுங்கண் நீர் நிலத்து நீர்த்து உக - நீண்ட தன் கண் நீரானது நிலத்தில் ஈரம் செய்து சிந்த; நின்றனன் -; குன்றன தோளவன் - மலை போன்ற தோள்களை உடைய இராமன்; தொழுது - (முனிவனை) வணங்கி, கொற்றவன் பொன் திணி நெடுமதில் வாயில் - அரசனது பொன்னால் செய்யப் பெற்ற அரண்மனை மதிலின் வாயிலில்; போயினான் - போய்ச் சேர்ந்தான்.
குன்றன தோளவனைப் தொழுது கொற்றவனாய இராமன் நெடுமதில் வாயில் போயினான் என்பதும் ஓர் உரை ஆயினும், வசிட்டனைக் 'குன்றன தோளவன்' எனல் ஏற்புடைத்தாகாமையின் அவ்வுரை பொருந்தாமை அறிக. நீர்த்து - நீரின் தன்மை செய்து அதாவது ஈரம் செய்து என்பதாகும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- When he had said this, the sage could find no word to say;
- he stood there as the tears from his long eyes wet the ground;
- and he of the hill-like shoulders bowed to him and went
- to the gate in the king's tall wall, thick with gold.
What the poem says
Vacittaṉ has no reply, and stands weeping until his tears soak the ground. Irāmaṉ bows to him and goes out to the gate of the palace wall to begin his journey. 'He of the hill-like shoulders' is Irāmaṉ, not the sage; such a phrase would not suit Vacittaṉ.