கம்பராமாயணம் 1849 · அயோத்தியா 4.167

Section அயோத்தியா காண்டம் / 4. நகர் நீங்கு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1சுற்றிய சீரையன் ; தொடர்ந்த தம்பியன் ;
முற்றிய உவகையன் ; முளரிப் போதினும்
குற்றம் இல் முகத்தினன் ; கொள்கை கண்டவர் ,
உற்றதை ஒருவகை உணர்த்துவாம் ; அரோ .

பொருள் · Meaning in Tamil

சுற்றிய சீரையன் - இடையில் கட்டிய மரவுரி உடையனாய்; தொடரும் தம்பியன் - தன்னைப் பின்பற்றிவரும் தம்பியோடு; முற்றிய உவகையன் - நிரம்பிய மகிழ்ச்சியுடன்; முளரிப் போதினும் - தாமரை மலரைவிட; குற்றம் இல் முகத்தினன் - குற்றமற்ற முகமலர்ச்சி கொண்டு செல்கின்ற இராமனின்; கொள்கை - மனக் கருத்தை; கண்டவர் - அறிந்த அந்நகர மக்கள்; உற்றதை - அடைந்த துன்பத்தை; ஒருவகை - ஓரளவுக்கு; உணர்த்துவாம் - சொல்லுவோம்.

கான் புகும் இராமனது முகமலர்ச்சி தாமரை மலரினும் பொலிந்தது என்பதால் அவனது மனத்தின் சமநிலை அறியலாயிற்று. 'அரோ' ஈற்றசை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Wrapped in bark cloth, his younger brother following him,
  2. full of gladness, his face more flawless
  3. than a lotus in bloom: what befell those who saw his resolve
  4. we shall tell in some measure.

What the poem says

Irāmaṉ sets out in bark cloth with Ilakkuvaṉ behind him, his face more radiant than a lotus. His calm cheerfulness on the way to exile shows how even his mind is. The poet now begins to describe, as far as words can, the grief of the people of Ayōtti who see him go.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1cuṟṟiya cīraiyaṉ; toṭarum tampiyaṉ;
muṟṟiya uvakaiyaṉ; muḷarip pōtiṉum
kuṟṟam il mukattiṉaṉ; koḷkai kaṇṭavar,
uṟṟatai oruvakai uṇarttuvām; arō.