கம்பராமாயணம் 1850 · அயோத்தியா 4.168
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அந்தணர் -; அருந்தவர் - அரிய முனிவர்கள்; அவனிகாவலர் - பூமி அரசர்கள்; நந்தல் இல் நகருளார் - கெடுதலில்லாத அயோத்தி நகரில் உள்ளவர்கள்; நாட்டுளார்கள் - கோசல நாட்டில் உள்ளவர்கள்; தம் சிந்தை புகல்வது என்? - மனம்பட்ட துன்பத்தைச் சொல்வது எவ்வாறு; மேல்வரும் உறுதி வேண்டலர் - (இராமன் காடு செல்வதால் தங்களுக்கு எதிர்காலத்தில் வரும் நன்மையும் விரும்பாதவர்களாய்; தேவர் உள்ளமும் வெந்தனர் - (இராமனது மரவுரிக் கோலம் கண்டும்) தேவர்களும் உள்ளம் வெந்து போனார்கள்.
தேவர்களுக்காகவே இராமன் மரவுரி தரித்துக் காடு சென்றானாகத் தேவர்களே அக்கோலம் கண்டு தரியாதவர்களாக மனம் வெந்தனர் ஆயின் மற்றவர் நிலையைச் சொல்வது எவ்வாறு? என்றாராம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The brahmins, the great ascetics, the kings who guard the earth,
- the people of the unfailing city and those of the land —
- what can be said of their hearts? Even the gods' hearts
- were burned, and they wanted no part of the good to come.
What the poem says
Everyone grieves at the sight: priests, sages, kings, city folk and country people. Even the gods, for whose sake Irāmaṉ is going to the forest to destroy the demons, are scorched with pain at seeing him in bark cloth. They no longer want the benefit they stand to gain. If the gods feel this way, there is no describing what the people feel.