கம்பராமாயணம் 1851 · அயோத்தியா 4.169

Section அயோத்தியா காண்டம் / 4. நகர் நீங்கு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அணங்கு அனார்கள் தாம் - தெய்வ மகளிரை ஒத்த அயோத்தி நகர மகளிர்: ஐயனைக் காண்டலும் - (வனம் புகும் மரவுரி அணிந்த) இராமனைக் கண்டவுடன்; மொய் இளந் தளிர்களால் - நெருங்கி இளமையான தளிர்களைக் கொண்டு; முளரிமேல் விழும் - தாமரை மலர்மேல் வந்து விழுகின்ற; மையலின் - கள்ளுண்ட மயக்கமுடைய; மதுகரம் - வண்டுகளை; கடியுமாறு என - ஓட்டும் தன்மை போல; கைகளின் - தம் கைகளால்; மதர் நெடுங்கண்கள் - செருக்கிய நீண்ட கண்களை; எற்றினார் - மோதினார்கள்.

தளிர்கள் - கைகள், தாமரை - முகம். வண்டு - கண்கள். ஓட்டுதல் - கைகளால் மோதுதல் என உவமை காண்க. முடிசூட வேண்டிய அரச மகன் மரவுரி தரித்த கோலம் அவர்கள் கண்களாற் பார்க்கப் பொறுக்க முடியவில்லை; ஆதலின் இப்படிச் செய்தனர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As soon as they saw their lord, the women, lovely as goddesses,
  2. as if driving off, with clusters of tender young leaves,
  3. the drunken bees that settle on a lotus,
  4. beat at their bold, long eyes with their hands.

What the poem says

The women of Ayōtti cannot bear to see the prince, who should have been crowned, dressed as a hermit. They strike at their own eyes with their hands. The poet turns this into a picture: their hands are soft young leaves, their faces lotuses, and their dark, restless eyes are bees drunk on nectar being shooed off the flowers.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aiyaṉaik kāṇṭalum aṇaṅku aṉārkaḷtām,
moy iḷan taḷirkaḷāl muḷarimēl viḻum
maiyaliṉ matukaram kaṭiyumāṟu eṉa
kaikaḷiṉ matar neṭuṅ kaṇkaḷ eṟṟiṉār.