கம்பராமாயணம் 1852 · அயோத்தியா 4.170
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
சிலவர் - சிலர்; தணிப்பு இல் அன்பினால் - அடக்க முடியாத அன்பால்; தம்மையும் உணர்ந்திலர் - தம் நிலையையும் அறியாதவர்கள் ஆயினராய்; செம்மல்தன் தாதையின் - இராமபிரானது தந்தையாகிய தயரதனைவிட; முந்தினார் - முற்பட்டு இறந்து விண் சென்றனர்: அம்மையின் - வருகின்ற பிறப்பில்; இருவினை அறுக்கவோ? - இருவினைகளையும் இல்லாமல் நீக்கக்கொள்ளவா; அன்றேல் - அப்படி இல்லாமற்போனால்; விம்மிய பேர் உயிர் மீண்டிலாமை கொல் - பிரிவினால் துடித்த அரிய உயிர் வெளிப் போனது திரும்ப மீளாமையாலோ.
சென்ற உயிர் இனித் திரும்பாமல் மீளா உலகம் சேர்ந்தது ஆகலின், “இரு வினை அகற்றவோ' என்றார். இருவினை அற்றவர் மீளா உலகம் சேர்வர் ஆதலின்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Lost to themselves through a love that would not be stilled —
- was it to rid themselves of both kinds of deeds in births to come,
- or was it that the great life that heaved within them never came back? —
- some went ahead even of the noble prince's father.
What the poem says
Some of the citizens, overcome with love, die of grief even before Tacarataṉ himself does. The poet offers two fanciful reasons. Perhaps they wanted to be free of both good and bad karma, so as to reach the world from which no one returns to birth. Or perhaps their breath, heaving with sorrow, simply left them and did not come back.