கம்பராமாயணம் 1859 · அயோத்தியா 4.177

Section அயோத்தியா காண்டம் / 4. நகர் நீங்கு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

இராமன் அல்லது - இராமனை அல்லாமல்; மற்றும் - வேறு; மன் உயிர்ப் புதல்வரைப் பெற்றிலார் - நிலைபெற்ற உயிராக உள்ள புத்திரர்களைப் பெறாதவர்களாகிய அத்தேவியர்; கன்னி நல்மயில்களும் - இளமையான நல்ல மயில்களும்; குயில் கணங்களும் - குயிற் கூட்டங்களும்; அன்னமும் - அன்னப் பறவைகளும்; சிறை இழந்து - இறக்கைகளை இழந்து; அவனி சேர்ந்தன என்ன - பூமியை அடைந்தவை போல; வீழ்ந்து உழந்தனர் - தரையில் விழுந்து வருந்தினார்கள்.

பறவைகளுக்குச் சிறகுகள் வாழ்வின் ஆதாரம். அதை இழந்த பிறகு அவை வாழ இயலா. அதுபோலவே இராமனே இவர்கள் அனைவர்க்கும் உயிராவான். இராமனை இழந்து உயிர் வாழ இயலாதவராக ஆயினர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Like young peahens, flocks of koels
  2. and swans that have lost their wings and dropped to the earth,
  3. they fell and suffered; for apart from Irāmaṉ
  4. they had borne no son who was their very life.

What the poem says

The queens collapse like peahens, koels and swans whose wings have been cut, dropping to the ground. These women had no sons of their own; Irāmaṉ was the life of every one of them. Just as a bird cannot live without its wings, they cannot live without him.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kaṉṉi nal mayilkaḷum, kuyil kaṇaṅkaḷum,
aṉṉamum ciṟai iḻantu avaṉi cērntaṉa
eṉṉa, vīḻntu uḻantaṉar; irāmaṉ allatu,
maṉ uyirp putalvarai maṟṟum peṟṟilār.