கம்பராமாயணம் 1860 · அயோத்தியா 4.178
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
இளையவர் அமுதினும் இனிய சொற்கள் - இளைய அத்தேவியரின் அமுதத்தைக் காட்டிலும் இனிமையான சொற்கள்; அளவு இறந்து உயிர்க்க விட்டு அரற்றும் தன்மையால் - அளவில்லாமல் பெருமூச்சு விட்டு அழுகின்ற காரணத்தால்; கிளையினும் நரம்பினும் நிரம்பும் கேழன - மூங்கிலாலும், நரம்பாலும் செய்யப் பெற்றனவாகிய; தொளைபடு குழலினோடு யாழ்க்குத் தோற்றன - உள்தொளை உடைய புல்லாங்குழலோடு யாழிசைக்குத் தற்போது தோற்றுப்போயின.
கிளை - மூங்கில். ஆகுபெயராய்ப் புல்லாங்குழலின் இசையைக் குறித்தது. நரம்பும் அவ்வாறே யாழிசையைக் குறித்தது. கேழன - சுவை உடையன. முன்பு அம்மகளிர் குரல் ஒலி குழலையும் யாழையும் வென்றது. இப்போது அழுது அரற்றிய காரணத்தால் தோற்றது என்பதாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The sweetness that fills the bamboo and the string,
- because they now sighed beyond measure and wailed,
- won out over the holed flute and the lute against
- the young queens' words, once sweeter than nectar.
What the poem says
The young queens' voices used to be sweeter than the music of the bamboo flute and the stringed yāḻ. Now, broken by endless sighing and wailing, their speech has lost that contest; the instruments sound sweeter than they do.