கம்பராமாயணம் 1861 · அயோத்தியா 4.179

Section அயோத்தியா காண்டம் / 4. நகர் நீங்கு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

“புகல் இடம் கொடு வனம் போலும் என்று” - இராமனுக்கு இனித் தங்கும் இடம் கொடிய வனம் என்று சொல்லி; தம் மகன் வயின் - தம்முடைய மகனாகிய இராமனிடம்; இரங்குறும் - அவலிக்கின்ற; மகளிர் வாய்களால் - அத்தேவியரது அழுது மேலும் சிவந்த வாய்களால்; அகல் மதில் நெடு மனை - அகன்ற மதிலை உடைய பெரிய அரண்மனை; அரத்த ஆம்பல்கள் - செவ்வாம்பல் பூக்கள்; பகலிடை - பகற்காலத்தில், மலர்ந்தது - மலர்ந்துள்ளதான; ஓர் பழனம் போன்ற - ஒரு வயலைப் போன்று ஆயின.

வாய்க்கு ஆம்பல் உவமை. அழுதலால் மேலும் சிவந்த வாய் செவ்வாம்பல் மலர்ந்தாற் போலும், பல்லாயிரம் தேவியர் அழுதலால் பல செவ்வாம்பல்கள் பகலில் மலர்ந்த வயல் போன்றாயிற்று அரண்மனை என்றார். 'ஏ' காரம் ஈற்றசை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'So his refuge now is the cruel forest!' they cried,
  2. and with the mouths of the women lamenting for their son,
  3. the great palace within its broad walls looked like
  4. a pond where red water lilies had opened in broad daylight.

What the poem says

The queens cry out that Irāmaṉ's only shelter now will be the harsh forest. Their mouths, opened wide in weeping and reddened by it, look like red water lilies. With thousands of them crying at once, the palace looks like a pond full of red lilies, though these flowers normally open at night, not by day.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1pukal iṭam koṭu vaṉam pōlum eṉṟu, tam
makaṉvayiṉ iraṅkuṟum makaḷir vāykaḷāl
akal matil neṭu maṉai aratta āmpalkaḷ,
pakaliṭai malarntatu ōr paḻaṉam pōṉṟavē.