கம்பராமாயணம் 1863 · அயோத்தியா 4.181

Section அயோத்தியா காண்டம் / 4. நகர் நீங்கு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

தண்டலைக் கோசலத் தலைவன் மாதரை - சோலை சூழ்ந்த கோசல நாட்டுக்குத் தலைவனாய தயரதன் தேவியரை; இரவியும் - சூரியனும் (இப்போது); கமல வாள்முகம் கண்டனன் - தாமரை மலர் போன்ற ஒளியுடைய முகத்தை (இது காறும் ஒருபொழுதும் காணாதவன் கண்டான்; விண் தலத்து உறையும் நல்வேந்தற்கு ஆயினும் - விண்ணின் கண் தங்கியுள்ள தேவ அரசனுக்கு ஆனாலும்; இடர் உற்றபோது - துன்பம் வந்தபோது; உறாதன என் உண்டு? - எவைதாம் வராதவை உண்டு.

வேற்றுப்பொருள் வைப்பணி. துன்பத்தில் இருப்பவர்களுக்கு எல்லா அவமானமும் வந்து சேரும் என்பது உலகியல்; அரண்மனையை விட்டு வெளியே வராதவர் ஆதலின் இதுகாறும் சூரியனால் பார்க்கப்படாதது அவர் முகம் என்றானாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Even the sun now saw the bright lotus faces
  2. of the wives of the lord of Kōcalam with its groves;
  3. even for the good king who dwells in the heavens,
  4. when sorrow strikes, what is there that does not befall?

What the poem says

The royal women have rushed out of the palace in their grief, so that for the first time even the sun sees their faces, which had always been kept from public view. The poet adds a general truth: when misfortune comes, every indignity follows, even for the king of the gods.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1taṇṭalaik kōcalat talaivaṉ mātaraik
kaṇṭaṉaṉ iraviyum, kamala vāḷ mukam;
viṇ talattu uṟaiyum nal vēntaṟku āyiṉum
uṇṭu iṭar uṟṟa pōtu eṉ uṟātaṉa?