கம்பராமாயணம் 1864 · அயோத்தியா 4.182

Section அயோத்தியா காண்டம் / 4. நகர் நீங்கு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1தாயரும் கிளைஞரும் சார்ந்து உளார்களும்
சேயரும் அணியரும் சிறந்த மாதரும் ,
காய் எரி உற்றனர் அனைய கௌவையர் ,
வாயிலும் முன்றிலும் மறைய மொய்த்தனர் .

பொருள் · Meaning in Tamil

தாயரும் - தாய்மார்களும், கிளைஞரும் - உறவினர்களும்; சார்ந்துளார்களும் - சார்ந்து பற்றுக்கோடாய் எண்ணித் தங்கியுள்ளவர்களும்; சேயரும் அணியரும் - சேய்மையிலும் அண்மையிலும் உள்ளாரும்; சிறந்த மாதரும் - அழகிற் சிறந்த மகளிரும்; காய் எரி உற்றனர் அனைய - சீறும் நெருப்பில் விழுந்தாற்போன்ற; கவ்வையர் - துன்பமுற்று; வாயிலும் முன்றிலும் மறைய - அரண்மனை வாயிலும் முற்றமும் மறையும்படி; மொய்த்தனர் - நெருங்கினார்கள்.

கவ்வை - அரற்றுதலுக்கு ஏதுவாகிய பெருந்துன்பம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The mothers, the kinsfolk, those who depended on the house,
  2. those from far and those from near, and the finest of women,
  3. in anguish like people fallen into a blazing fire,
  4. thronged so thickly that gateway and courtyard were hidden.

What the poem says

Mothers, relatives, dependants, people from near and far all crowd around, as tormented as if they had fallen into a fire. They pack the palace gateway and courtyard so densely that the ground cannot be seen.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tāyarum kiḷaiñarum cārntuḷārkaḷum
cēyarum aṇiyarum ciṟanta mātarum,
kāy eri uṟṟaṉar aṉaiya kavvaiyar,
vāyilum muṉṟilum maṟaiya moyttaṉar.